- Thursday
- August 20th, 2026
புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் வி ரி தமிழ்மாறன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் எனக்கு இருந்து வரும் அரசியல்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதி ஊடாக இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது கைதடி வீதியால் வந்த கனரக வாகனத்தோட கோப்பாய் சந்தியில் வைத்தே இவ்விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அவர் தற்போது யாழ்.போதனா...
கடந்த வியாழக்கிழமை, 21 மே 201 லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தன்னை ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளா் எனக்கூறிக்கொள்ளும் வா்த்தகா் துவாரகேஸ்வரன் வழங்கிய செய்திக்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிவராசா ( போல்) அவா்கள் தெரிவித்த...
யாழ் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் இலங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்த திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அதன்படி யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர சீதாவாக்கைபுர பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றப்பட்டுள்ளார். அதேபோல...
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதியும் சட்டத்தரணியுமான வீ.ரி தமிழ்மாறன் மறுக்கின்றார். கைதுசெய்யப்பட்ட கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்றும் அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு மேலும்...
இவர் வித்தியாவிற்கான போராட்டம் என்ற பெயரில் சுழிபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு முன் பிரதான வீதியில் மதுபோதையில் நின்று அட்டகாசம் செய்த நபர். கஸிப்பு குடித்துவிட்டு இரவு 11 மணி வரை போராட்டம் செய்யப் போகிறாராம். வீதியால் எவரும் போக விட மாட்டாராம். வீதிக்கு குறுக்கே கயிறு கட்டி போக்குவரத்துக்களை தடை செய்திருந்தார். விக்டோரியா கல்லூரி ஆசிரியர்களைக்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுப்படுகொலை தொடர்பலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விஷேட விசாரணைகளுக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின், கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு குழுவொன்று யாழ். புங்குடுதீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ்...
புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும். நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர். யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முன்னர்...
புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில். யாழில் நாளை புதன்கிழமை தனியார் பேருந்துகள்அரச பஸ்கள் சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் இயங்காதெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளை புதன்கிழமை மாவட்ட இளைஞர் கழகம் யாழ்.நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு மாணவி...
மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தியுள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய தரப்புகளிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் கடற்கரைக்குச் சமீபமாக 25 ஹெக்டெயர் அரச காணியில்...
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே சட்டத்தரணி...
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை வெளியாகியுள்ளது. நேற்று மேலதிகமாக கைதான5 பேர்களில் ஒருவன் வேலணை பிரதேசசபையில் வேலை செய்கிறான். மற்றைய நால்வரும் கொழும்பில் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே கைதான மூவரில் ஒருவனும் கொழும்பில் இருந்து வந்திருந்தான். இவனுடன், இந்த நால்வரும் திட்டமிட்டு இந்த கொடூரத்தை...
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த மாணவி, இனம்தெரியாத நபர்களினால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார் . இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வி கற்கும் மாணவி ஆவார். இவர் நேற்றுக்காலை வல்லனில் உள்ள தனது வீட்டில் இருந்து, பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை...
எதிர்வரும் சனிக்கிழமை (16), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (17) களில் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை இடம்பெறாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் புகையிரதப் பாதையில் திருத்த வேலைகாரணமாக இரு நாட்களும் அநுராதபுரம் வரையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையே இடம்பெறவுள்ளது.
யாழ்.புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக...
Loading posts...
All posts loaded
No more posts









