புதிய கூட்டமைப்பில் குதிக்க மஹிந்த முடிவு!

ஸ்ரீ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குழுவினருக்கும் சந்தர்ப்பம் வழங்குவதில்லை என  சு.கா மற்றும் ஐ.ம.சு.கூ ஆகிய கட்சிகளின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதேவேளை, ஐ.ம.சு.கூ.வின் அதிகாரத்தைப் பெற்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் மஹிந்த...

ஈ.பி.டி.பி தனித்து வீணையில் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது கட்சி தனித்து போட்டியிட வேண்டும்...
Ad Widget

மஹிந்த சுதந்திரக்கட்சியில் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி அனுமதி மறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த...

வடக்கு, கிழக்குக்கு வெளியேயும் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் – தமிழரசுக்கட்சி

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.   இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அனுப்பி வைத்துள்ளனர். அக் கடிதத்தில்...

வித்தியின் தலைமையில் முன்னாள் போராளிகள் தேர்தலில்?

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக் கட்டமைப்பு ரீதியாக தாம் ஆற்றவிரும்புகின்ற - தாம் ஆற்றக்கூடிய  - பங்கு பணி குறித்து ஒன்றுகூடி ஆராயவிருக்கின்றனர். சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின் ஒருங்கிணைப்பில் வடமாகாணத்தில் உள்ள முன்னாள் சிரேஷ்ட போராளிகள் பலர் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுகின்றனர்....

அரசு ஊழியர்களுக்கு மகிந்த எச்சரிக்கை!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீதிமன்ற தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய எச்சரித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கும் என்று ஜனாதிபதி   வெள்ளிக்கிழமை இரவு அறிவித்த பின்னணியில் நேற்று  சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம்...

ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்த டக்ளசுக்கு தமிழ்மக்கள் குறித்துப் பேச அருகதையில்லை! – முன்னாள் எம்.பி விநாயகமூர்த்தி

ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சாவகச்சேரி கண்டிவீதியில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில்...

யாழிலும் இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு!

யாழ்.குடாநாட்டில் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் தொற்றுக்கு இதுவரை 100ற்கு மேற்பட்டவர்கள் உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.    கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த வைரஸ் தொற்று இருந்த போதும் கடந்த சில வாரங்களாகவே குறித்த வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வைரஸ்  தாக்கத்திற்கு உள்ளான மன்னார் மாவட்டத்தைச்...

மகிந்த,கோத்தா, பஸில் மற்றும் பொன்சேகா உள்ளிட்ட 42 பேர்மீது போர்க்குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரது சகேதரர்களான கோத்தபாய, பசில் ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது. ...

புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் திருமலையில் போட்டியிட விண்ணப்பத்தை மாவையிடம் கையளித்தார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான...

நாடாளுமன்றம் சனாதிபதியினால் கலைக்கப்படுகின்றது.ஆகஸ்ட் 17 இல் தேர்தல் !

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று சனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வேட்புமனுத்தாக்கல் அடுத்தமாதம்...

பளையில் பல்கலைக் கழக மாணவி தூக்கு மாட்டி தற்கொலை – முகப்புத்தகம் காரணம்

கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் இன்று காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார்...

வவுனியா அரச அதிபரை இடமாற்ற கோரி வடக்கு மாகாண சபையில் முழுநாள் போராட்டம்!

வட மாகாண சபையின் 31ஆவது அமர்வு சபை உறுப்பினர்களின் முழுநாள் போராட்டமாக நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றக் கோரிய நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அந்த இடமாற்றத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி சபை உறுப்பினர்கள் சபையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் தொடர் பேச்சின் பின்னர் அவை மண்டபத்துக்கு சென்ற உறுப்பினர்கள்...

மற்றைய எம்.பி.க்களும் தமது நிதி ஒதுக்கீடு பற்றி வெளிப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் மாவைக்கு சாட்டை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுக்கொண்டதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜானாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள விக்னேஸ்வரன், தனது முறைப்பாடுகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ...

கூட்டுறவு அமைப்புக்களில் இளைஞர்களை உள்வாங்குங்கள்: கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசன்

வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக அதிக எண்ணிக்கையான இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுமாறு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பணித்துள்ளார்.   வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் கூட்டுறவு அபிவிருத்தி...

சரணடையும் புலிகளிற்கு மகிந்த என்னிடம் உயிருத்தரவாதம் தந்தார்- அம்பலப்படுத்துகிறார் சந்திரகாந்தன் சந்திரநேரு!

யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் போராளிகளை, அரசாங்கம் சுட்டுக் கொன்ற விடயம் பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு. விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களின் சரணடைவிற்கு, இலங்கை அரசுடன் இடைத்தரகராக பணியாற்றிய சந்திரநேரு, அது பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

உடுத்துறையில் காவல்துறை செய்தது என்ன! உண்மைகள் இதோ

உடுத்துறையில் காவல்துறை சுட்டது பற்றிய செய்திகள் காவல்துறையின் வாக்கு மூலத்துடன் உள்ளுர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நபரின் குடும்பத்தின் மீது கஞ்சா காய்ச்சுவதாக காவல்துறையிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சென்று விசாரித்ததில் அங்கு தடயங்கள் எதுவும் இல்லை . தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்த குடும்பத்திற்கு தெரிய வந்தது ம்.தகவல்கொடுத்தவரது வீட்டில் தாக்குதல்...

தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்!

தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப் பாசனம், நீர் விநியோக அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது....

யாழில் நடந்தது சில விஷமிகளின் சேட்டையே! பொதுமக்களின் வன்முறையல்ல!-டக்ளஸ்

யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், குற்றவாளிகள் உயர்ந்தபட்ச தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களது உணர்வு வெளிப்பாட்டு நிகழ்வானது, ஒரு சில சமூக விரோத சக்திகளால் திசை மாற்றஞ் செய்யப்பட்டதே தவிர, இது பொதுமக்களின் வன்முறைச் செயற்பாடுகளல்ல. எனவே, இதனை வடக்கில் மீண்டும் ஆயுத...

வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர்,...
Loading posts...

All posts loaded

No more posts