Ad Widget

வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.

swiss-ranjan-1

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர், சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார்.    ஆ

யினும், வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படம் என்று எமது அமைப்பைச் சேர்ந்த சொக்கலிங்கம் ரஞ்சன் என்கின்ற சுவிஸ் ரஞ்சனின் புகைப்படத்தை சில விசமிகள் பிரசுரித்திருப்பதை இணையத்தளங்களிலும் சில முகநூல்களிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

 

எமது அமைப்பைச் சேர்ந்த ரஞ்சன் என்பவருடன், எமது தலைவர் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள் இருக்கும் புகைப்படங்களை பிரசுரித்து, அதில் எமது அமைப்பைச் சேர்ந்த ரஞ்சனை, இவர்தான் குமார் என பொய்யாக சுட்டிக்காட்டி அடையாளம் காட்டியிருக்கின்றார்கள்.    ஆனால் அது உண்மையல்ல. சில அரசியல் இலாப உள்நோக்கம் கொண்டவர்கள், ஏனைய தமிழ் அரசியல் பிரமுகர்கள் மீது திட்டமிட்டு சேறுபூசும் அல்லது அவர்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நோக்குடன் சில அரசியல் பிரமுகர்களின் பின்னணியில் இயங்கும் இணையத்தளங்களையும் முகநூல் பாவனையாளர்களையும் பயன்படுத்தி,  இந்த கீழ்த்தரமான ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

swiss-ranjan-3

  இணையத்தளங்களில் காணப்படும் எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சனின் புகைப்படங்களை நாம் தருகின்றோம். இப்புகைப்படங்களாவன மாணவி வித்தியாவுக்காக தற்போது சுவிஸில் நடைபெற்றுவரும் அஞ்சலிக் கூட்டங்களில் சுவிஸ் ரஞ்சன் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டவையாகும்.    இப்புகைப்படங்கள் ரஞ்சன்இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கும் குமார் அல்ல என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பதுடன், இந்த ஆள்மாறாட்டக்காறர்களின் செயலையும் அம்பலப்படுத்தி நிற்கின்றது

இந்நடவடிக்கையானது, வித்தியாவின் கொலையை மலினப்படுத்துவதோடு அவரின் நெருங்கிய உறவினர்களையும் மீண்டும் மீண்டும் ஆழ்ந்த வேதனைக்குள் தள்ளும் என்பதை இச்செயலைச் செய்பவர்கள் உணராதிருப்பது வேதனையானதே.    இவ்வாறான மலினமான அரசியல் இலாபம் தேடும் பிரமுகர்களை, மக்கள் அடையாளம் காண வேண்டும்.  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts