Ad Widget

துவாரகேஸ்வரன் மக்களை ஏமாற்றுகின்றார் – வேலைணை பிரதேச சபை தலைவர்

கடந்த வியாழக்கிழமை, 21 மே 201 லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தன்னை ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளா் எனக்கூறிக்கொள்ளும் வா்த்தகா் துவாரகேஸ்வரன் வழங்கிய செய்திக்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிவராசா ( போல்) அவா்கள் தெரிவித்த கண்டன செய்தி

புங்குடுதீவில் நடைபெற்ற பாடசாலை மாணவி வித்தியா அவா்களின் படுகொலைக்கு மக்கள் கொந்தளித்த வண்ணமாகவிருந்த வேளையில் அங்கு வி.ரி தமிழ்மாறன் ஒரு மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தாா் காரணம் இக்கொலையின் சந்தேகநபரான சுவிஸ் பிரஜையை விடுவிக்கும்பொருட்டு அவரை தப்பவைத்துவிட்டு மக்களை ஏமாற்றுவதற்காக.

 

அச்சமயத்தில் நானும் அங்கு சென்றிருந்தேன்.ஆனால் அங்கு வி.ரி தமிழ்மாறனின் நரித்தனம் மக்களுக்கு விளங்கியதால் கொந்தளித்து அவரைத் தாக்குவதற்கு முற்பட்டுக்கொண்டிருந்தனா் அப்போது அங்கு வி.ரி தமிழ்மாறனை காப்பாற்றுவதற்காக வந்த துவாரகேஸ்வரன் அங்கு நின்ற வடமாகாண பொலிஸ் அதிகாரியிடமிருந்து ஒலிவாங்கியைப் பறித்து என்னைப்பற்றி பிழையான கருத்துக்களை வெளியிட்டிருந்தாா்

ஆனால் உண்மை விளங்கிய மக்கள் அவரை அங்கிருந்து வெளியேறும்படி கோஷமிட்டு தாக்கமுற்பட்டனா் ஆனால் தற்போது அவா் வழங்கியிருக்கும் செய்தி எனக்கு ஆச்சா்யம் அளிக்கின்றது அன்பான ஊடகவியலாளா்களே நீங்கள் பாதிக்கப்ட்ட மக்களிடம் செய்திச்சேகரிப்பில் ஈடுபட்டால் புாியும் இவரின் உண்மைத்தன்மை அத்தோடு இவரின் வாயிலிருந்து அடிக்கடி வா்த்தகா்கள் என்றசொல் வருகின்றது இவா் புங்குடுதீவிற்கு வா்த்தக நோக்கத்திற்காகவே வருகை தந்து பின்னா் தீவகப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் எம்மீது உள்ள நற்பெயரை களங்கப்படுத்துவதற்கும் தான் அரசியல் இலாமமடைவதற்குமாகவே பொய்களை ஊதுகின்றாா்.

 

வித்தியா பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கி கேவலப்படுத்துவதுகின்றாா்கள் உண்மையை மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள் இதனை அரசியலாக்கி மக்களை தூண்டிவிட்டு கபடநாடகமாடுவதற்கு ஒருபோதும் இமளிக்கக்கூடாது ஒருவிடயத்தை கருத்தில்கொள்வேண்டும் மூத்த அரசியல்வாதியும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா என்னைப்பற்றி எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை ஏனென்றால் அவருக்குப் புரியும் நான் எந்தவொரு குற்றவாளியையும் நான் விடுவிப்பதற்கு முயற்ச்சி செய்யவில்லை என்று

ஆகவே இவா் அரசியல் பழிவாங்காமல் பாதிப்படைந்த மக்கள் மத்தியில் நான் செய்ததாக சொல்லும் செய்திகளை அங்கு கூறட்டும் நானும் நேரடியாக மக்களிடம் வருகின்றேன்.இதனை ஊடகங்களும் கருத்திற்கொள்ளுங்கள்.

Related Posts