- Thursday
- August 20th, 2026
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியிலும், வன்னித் தேர்தல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட புலிகள் இயக்க போராளிகள் தீர்மானித்து உள்ளனர். ஜனநாயக போராளிகள் கட்சி என்கின்ற பெயரில் அமைப்பு ரீதியாக இணைந்து உள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய கூட்டத்தில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் போராளிகள் ஒருமனதாக விடுத்த...
அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த முன்னாள் போராளியை திங்கட்கிழமை (06) இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சக்திவேல் இராஜகுமரன் (வயது 41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கடவுச்சீட்டு, நிலஅமைப்பு வரைபடங்கள், வங்கிப்புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளை...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் தமது வேட்புமனுக்களில் 30 வீதமான இடத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய பட்டியலில் மூன்றில் ஒரு வீதத்தை பெண்களுக்காக ஒதுக்குமாறும் அமைச்சு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 5.8...
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்தில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் கருத்து கூறியதாவது, கூட்டமைப்புக்கும், எமது கட்சிக்கும்...
முன்னாள் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். எனினும் அப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில்,...
தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழ்த்தேசம் என்றால் என்ன? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் உருவாக்கப்பட்டது? போன்ற வினாக்களுக்கான விடைகளை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்குகின்றார். 2009 மே பின்னர் வரும் காலப்பகுதி தமிழர்கள் பலவீனமாக இல்லை, பூகோள அரசியலில் தமிழர்கள் மிகப்பெரும் பலமாகவே உள்ளனர் அதனை தமிழர் நலன் சார்ந்து அணுகுவதில் மக்களின் பிரதிநிதிகள் தவறவிட்டுள்ளனர். என்று...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அத்துடன், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எமது கட்சி தனித்து போட்டியிடப் போகிறது.எமது கொள்கையான தேசியம்,...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 10 இடங்களில் 6 இடங்களில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள்,டெலோ 1 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே சம்பந்தன் மேற்படி கூறியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரர்...
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ தலைமையில் இடம் பெறும் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்...
வடக்கின் பிரபல தொழிலதிபரும், உள்ளூர் உற்பத்தித் துறையில் தடம் பதித்தவருமான அண்ணா கோப்பி நிறுவனர் பொ.நடராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது 69 ஆவது அகவையில் காலமானார். இணுவில் தெற்கினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவராவார். தமது சுய முயற்சியால் வீட்டில் கோப்பியைத் தயாரித்துத் தாமே அதனைத் துவிச்சக்கர வண்டியில்...
தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக வௌியான தகவல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி அத்தியவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று தெரியவருகிறது. இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் வேட்புமனு அனுமதி தொடர்பிலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை...
வருகின்ற தேர்தல் தொடர்பிலான வாக்களிப்பு தொடர்பில் எனது இறுதி நிலைப்பாடு என்ன என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை. அதற்காக வருந்தவில்லை மகிந்த பற்றி நாம் பேசிக்கொள்வதால் அல்லது அவரது வருகையின் விளைவு பற்றி நாம் ஆராய்வதிலும் பலனில்லை. தேசிய ரீதியில் ஏற்படப்போகும் அந்த மாற்றத்தால் எமக்கு எந்த விளைவும் இல்லை காரணம் அதனால் பாதிக்கப்படபோவது சிங்கள...
தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியற் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சர்வதேச கூட்டுறவுதின நிகழ்ச்சி யாழ் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (04.07.2015) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கொழும்பு உட்பட வேறு பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிர்வாகச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்றும் கூட்டமைப்பின்...
தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும் ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் அரசியல் கட்சிகள் தோன்றுவதும்இ அவைகள் சுதந்திரமாக செயற்படுவதும் அவரவர் ஐனநாயக உரிமை! அதை மறுப்பதும்இ தடுப்பதும் அப்பட்டமான ஐனநாயக...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சிறிது காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது. ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளை...
Loading posts...
All posts loaded
No more posts
