Ad Widget

மகிந்த,கோத்தா, பஸில் மற்றும் பொன்சேகா உள்ளிட்ட 42 பேர்மீது போர்க்குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரது சகேதரர்களான கோத்தபாய, பசில் ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.    ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின்  கூட்டத் தொடரில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைய இலங்கையில் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள்  மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணைகளை நடாத்தியது.

இந்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்த போதும் இலங்கை அரசு காலஅவகாசம் தேவை என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அது செப்ரெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.    எனவே தற்போது இந்த விசாரணை அறிக்கையினை தயாரிக்கும்  பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது எனவும் ஐ.நாவில் குறித்த அறிக்கை உத்தியோக பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னர் அதன் பிரதி ஒன்றினை மைத்திரிக்கு கையளிக்கவுள்ளதாகவும்  ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விசாரணையில் மகிந்த ராஜபக்ச ,  முன்னாள் பாதுகாப்பு செயலர் கேத்தபாய ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும்  முன்னாள்  இராணுவத் தளபதியும்  இன்னாள்  பீல்ட் மார்ஷலுமான சரத்பொன்சேகா உள்ளிட்ட 42 பேர் மீது போர்குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts