- Thursday
- August 20th, 2026
வடகொரிய தலைவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் யொன்- சொல், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியன்று நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன்னால் விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் மரண தண்டனைக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்....
யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றம் ஏற்பாட்டில் நாளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.சுமந்திரன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 15.5.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ” வெளியில் தமிழர்களுக்கு...
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அம்மையாரின் விடுதலை தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன் மீண்டும் பதவியேற்கவிருக்கும் மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்;. உலக வலசைப் பறவைகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கான...
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 215 பேர் வாக்களித்தனர். எதிராக சரத் வீரசேக எம்.பி வாக்களித்தார். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
தூயநீருக்காக நல்லூர் முன்றலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராதப் போராட்டம் ஆளுனர் பள்ளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் போன்றோரது நேரடித் தலையீட்டினால் சற்று முன்னர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுனரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக உண்ணாவிரதிகளின் முக்கிய கோரிக்கைகளுக்குச்...
அண்மையில் கனடா சென்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் , முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் சிறுபிள்ளைத்தனமாக கருத்து மோதிக்கொள்வதாக கூறினார். அத்துடன் தான் வருகின்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில்போட்டியிடப்போவதாகவும் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாகவும் தெரிவித்தார் அத்துடன் முதலமைச்சர் கொண்டுவந்த இனப்படுகொலை தீர்மானம் தனக்கோ சம்பந்தனுக்கோ தெரியாது...
மீள் குடியேற்றம் என்று கூறுகிறார்கள், ஆனால் ஓசை படாமல் வீட்டை இடித்து தள்ளுகிறார்கள். -விக்கி ஆவேசம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களின் பயன்பாட்டிற்கென கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த இந்த விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், அங்கு மேடையில்...
யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷமிகள் விஷத்தினை கலந்ததால் அதனை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் கலந்த நீரினை பருகிய மாணவர்கள் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்ட மாணவர்களில் 26 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து தெல்லிப்பளை...
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு...
நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளதா எனச் சோதித்து அறியக்கூடியரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்துள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று புதன்கிழமை (11.03.2015) கையளித்துள்ளார். வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக...
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நேற்று கூடி வெளியிட்ட தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைபின் பேச்சாளரும் தமிழ் தேசியக்கூட்டமைபின் அங்கத்துவ கட்சியான ஈபி ஆர் எல் எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், உருவப் பொம்மை எரிப்புக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். விமர்சனம் என்பது கூட, அரசியல்...
வவுனியாவில் ஞாயிறன்று(1.3.2015) காலை கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அந்தக் கட்சியின் மகளிர் அணி துணைச்செயலாளரும் வட மாகாணசபை உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்குத் துணை...
சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலை ஆய்வுக் கலந்தரையாடல் ஒன்று 2015-22-02 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சிந்தனைக் கூடத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 4மணிக்கு, “வடக்கின் இன்றைய நிலை” எனும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தலைமையுரையாற்றிய சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் பின்வரும் கருத்துகளை முன்வைத்தார்....
யாழ் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவதற்காக நேற்று முதல் இணையத்தள வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் வணிக அத்தியட்சகர் டி.டப்ளியூ. சிசிர குமார தெரிவித்துள்ளார். இணையத்தள வசதிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன கலந்து...
இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, தமிழ் கட்சியினர் செல்வது இல்லை. இது கடந்த 33 வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால் அதனை சுமந்திரனும் சபந்தர் ஐயாவும் உடைத்துவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள இதர உறுப்பினர்கள் போகவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் அதனையும் மீறி சுமந்திரனும் சம்பந்தரும் சென்றுள்ளார்கள். இதனை நியாயப்படுத்த முற்பட்டுள்ளார் சுமந்திரன்....
உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. அது இன்னும் காலதாமதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே தெரிவித்ததை போன்று மார்ச் மாதம் ஐ.நா அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள்...
வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார். இதற்கு ஆதரவாக பேசிய பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தார். இதன் போது குறுக்கிட்ட மற்றொரு உறுப்பினர் அனந்தி...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும் அதற்கு நீதி வழங்குமாறும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் பேரணி போராட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பலாலி வீதி...
Loading posts...
All posts loaded
No more posts
