Ad Widget

புங்குடுதீவில் நடந்தது என்ன? குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்; தமிழ்மாறன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதியும் சட்டத்தரணியுமான வீ.ரி தமிழ்மாறன் மறுக்கின்றார்.

கைதுசெய்யப்பட்ட கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்றும் அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு மேலும் தெரிவிக்கையில், தனது சொந்த ஊரான புங்குடுதீவில் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதனால் மக்களின் நன்மை கருதி தான் அங்கு சென்றதாக அவர் கூறினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் திட்டமிடப்படவை என்றும் அரசியல் நோக்கில் வேண்டுமென்றே திரிவுபடுத்தப்பட்டு தனது சொந்த வாழ்க்ககைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படுவதாகவும் தமிழ்மாறன் கூறினார்.

உண்மை நிலை தெரிந்த புங்குடுதீவு மக்கள் தொடர்ச்சியாக தன்னுடன் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் கூறிய அவர் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் செயற்பாடுகளில் தான் ஈடுபடவுள்ளமையினால் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தன்னை ஓரங்கட்ட முயற்சிப்பதாகவும் ஆனால் உண்மை நிலமை மக்களுக்கு தெரியும் என்றும் தமிழ்மாறன் கூறினார்.

 

மாணவியின் சகோதரர் மற்றும் புங்குடுதீவு மக்களின் அவுஸ்ரேலிய வானொலி ஒன்றிற்கான கருத்து http://media.sbs.com.au/audio/tamil_150520_413547.mp3

 

Related Posts