- Sunday
- November 8th, 2026
வடபகுதி கடற்பரப்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறும் தென்னிலங்கை இழுவைப் படகுகளை விரட்டியடிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று வடமாகாண கடற்தொழில் சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டீழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். வடமாகாண கடற்தொழிலாளர் இணையம்,...
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26-ந் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்ஜெய இடம்பிடித்துள்ளார்....
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது அல்லது கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான எந்த தீர்மானமும் அரசிடம் இல்லையென்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார்...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்தி நடிகர் அக்ஷய்குமாரின் போர்ஷன் முடிந்து விட்டது. ரஜினி இன்னும் 35 நாட்கள் நடிக்க வேண்டியது இருக்கிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன்...
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துக்கள், பதிவுகள் என ஒவ்வொருவரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிமிடத்திற்கு ஒருமுறை புதுப் புது செய்திகள், உண்மையோ, பொய்யோ 'வாட்ஸ்-அப்' மூலம் பரவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. கடந்த...
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'பைரவா' படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். 'அழகிய தமிழ் மகன்' படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. பைரவா படத்தின் வெளியீட்டு தேதி...
அரிசியின் விலை உயர்வடைந்துள்ளது. பண்டிகைக் காலம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அரிசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 60 முதல் 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்டீம் அரிசி 80 முதல் 85 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சம்பா அரிசி 90 முதல் 95 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக்...
யாழ்.பல்கலைகழக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவ வழக்கு விசாரணை மாணவர்கள் பரஸ்பரம் சமாதானமாக செல்வதாக மன்றில் தெரிவித்ததை அடுத்து வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட முதலாம் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு கடந்த யூலை மாதம் 16ம் திகதி நடைபெற்றது. அந்நிகழ்வில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் இணைத்து...
தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் அநியாயச் செயல்களுக்காக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து...
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, அவற்றை விற்பனை செய்தமை தொடர்பாக 815 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று தொடரப்பட்ட வழக்கில் 5,305,500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பாவனையாளர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்...
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட 42 குடும்பங்களின் காணிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட மாற்றுக் காணிகளை தாம் வாங்கப்போவதில்லையென அக்குடும்பங்கள் தெரிவித்துள்ளனர். தம்மால் கையகப்படுத்தப்பட்ட 59 குடும்பங்களின் காணிகளை விடுவிப்பதாகவும் ஏனைய 42 குடும்பங்களுக்குரிய காணிகளை தாம் வழங்கப்போவதில்லையென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
200 சீன இணையர்களுக்கு சிறீலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது என சிறீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்காவில் பிரமாண்டமான திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு சீனர்களும் இந்தியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே கொழும்பில் 200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் பாரிய திருமணத்தை நடத்துவதற்கு முன்பதிவுகள்...
வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால் பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசத்துரோகிகள் என பிரகடனம் செய்யப்பட்ட கெப்பிட்டிக்கொல திசாவே உள்ளிட்ட 19பேரும் தேசத்துரோக குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டுள்ளனர். கண்டிய சிங்களத் தலைவர்களான கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரையும், 1818ஆம் ஆண்டு, ஜனவரி 10ஆம் திகதி தேசத் துரோகிகளாக அறிவித்திருந்தார் ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக். 198 ஆண்டுகளுக்குப்...
கிளிநொச்சி முகமாலை பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, விமான படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு...
மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை, பொருளாதார மத்திய நிலையத்துக்கு விநியோகிக்கும் நடவடிக்கைக்கு மாத்திரம் பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது....
இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதான கூட்டு தொழில் முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க தயாரென MMBL-Pathfinder Group குழுமம் பயணப்படகு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணப்படகு சேவையில் முன் நிலை வகிக்கும் MMBL-Pathfinder Group குழுமம இத்துறையில் முன் நிலை...
மும்பையில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் போட்டியில் ஜென்னிங்ஸ், குக், அஸ்வின் சாதனை படைத்துள்ளனர். * இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் இந்தியாவுக்கு எதிராக நேற்று 2 ஆயிரம் ரன்களை (24 டெஸ்டில் 2,027 ரன்) தாண்டினார். இந்தியாவுக்கு எதிராக இந்த இலக்கை கடந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (2,555 ரன்), வெஸ்ட் இண்டீசின்...
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில்...
கடந்த அரசாங்கமானது முன்னாள் போராளிகளுக்கு முறையான ரீதியில் புனர்வாழ்வளிக்காமல் விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அதனால் வடக்கிலிருந்து எக்காரணம் கொண்டும் இராணுவத்தை வெளியேற்ற முடியாதென குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவீனங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புனரவாழ்வளிக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என தெரியாத...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன், விபத்தொன்றில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக புதன்கிழமை (07) அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பாண் விற்பனையில் ஈடுபடும் சிறிய ரக வானுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Loading posts...
All posts loaded
No more posts
