Ad Widget

டிசம்பர் 17 ஆம் தேதி ‘பைரவா’ பாடல்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.

‘அழகிய தமிழ் மகன்’ படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. பைரவா படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் பைரவா படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் தேதி குறித்து விட்டார்கள் என்று தகவல் அடிபடுகிறது. அதாவது வருகிற 17 ஆம் தேதி சனிக் கிழமையன்று ‘பைரவா’ படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் ‘பைரவா’ ஆடியோ வெளியிட்டு தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ‘பைரவா’ படக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய் படத்துக்கு முதன் முதலாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் என்பதால் ‘பைரவா’ படப் பாடல்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள்! இதனால் ‘பைரவா’வின் பாடல்கள் வெளியீட்டு விழா எப்போது என்பதை அறிய விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதிகாரபூர்வமான அறிவிப்புக்கும் காத்திருக்கின்றனர்.

Related Posts