Ad Widget

காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, விற்பனை செய்தமை தொடர்பான வழக்கில் 5கோடி தண்டம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, அவற்றை விற்பனை செய்தமை தொடர்பாக 815 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று தொடரப்பட்ட வழக்கில் 5,305,500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பாவனையாளர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதி வரை 815 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதுடன் இதன்மூலம் நீதி மன்றத்தினால் தண்டப்பணமாக 5,305,500 ருபாய்கள் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் யாழ் மாவட்ட இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்தார் .

இதில் ஜனவரி மாதம் 62 வழக்குகளும் தண்டமாக 716,500 ருபாய்களும்,பெப்ரவரி மாதம் 86 வழக்குகளும் தண்டமாக 894,000 ருபாய்களும், மார்ச் மாதம் 65 வழக்குகளும் தண்டமாக 417,500 ருபாய்களும், ஏப்ரல் மாதம் 68 வழக்குகளும் தண்டமாக 370,000 ருபாய்களும்,மே மாதம் 64 வழக்குகளும் தண்டமாக 295,000 ருபாய்களும்,
ஜூன் மாதம் 85 வழக்குகளும் தண்டமாக 336,500 ருபாய்களும், ஜூலாய் மாதம் 77 வழக்குகளும் தண்டமாக 290,000 ருபாய்களும், ஓகஸ்ட் மாதம் 86 வழக்குகளும் தண்டமாக 606,500 ருபாய்களும்,செப்ரெம்பர் மாதம் 85 வழக்குகளும் தண்டமாக 407,000 ருபாய்களும், ஒக்டோபர் மாதம் 77 வழக்குகளும் தண்டமாக 536,000 ருபாய்க ளும், நவம்பர் மாதம் 60 வழக்குகளும் தண்டமாக 436,500 ருபாய்களும், அறவிடப்பட்டுள்ளன.

Related Posts