இன்று முதல் காணாமல் போனோர் அலுவலகம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று முதல் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கின்றது. இந்த அலுவலகத்தை செயற்பட இடமளிப்பது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்கிழமை கைச்சாத்திட்டார். காணாமல் போனவர்களது பெற்றோர் மற்றும் உறவினர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணாமல் போனோர் தொடர்பான...

20 ஆவது திருத்தச் சட்டம் குறித்து விளக்குகின்றார் தவராசா

மாகாண சபைகளின் அதிகாரத்தில் அரசாங்கம் தலையிடவில்லை என வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக, சில விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், அரசியலமைப்பு மாற்றத்துடன் 20ஆவது திருத்தத்தினை அரசாங்கம் கொண்டு வந்திருந்தால்,...
Ad Widget

யாழ். பல்கலையில் தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுநாள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி லெப்.கேணல்.திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் நேற்று(15) ஆரம்பித்து எதிர்வரும் 26ஆம் நாள் வரை பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுகூர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் நாளிலிருந்து 26ஆம் நாள் வரையிலான 12 நாட்களும் நீராகாரம் எதுவுமின்றி தன்னை ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நாள்...

கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைக்க நீதிமன்றம் அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு...

யாழ்பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டம் தற்காலிமாக இடைநிறுத்தம்!

இது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக இன்று (14-09-2017) இடம்பெற்ற எமது பொதுச்சபைக் கூட்டத்தின் பின்னர் போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவது என பொதுச்சபை தீர்மானித்துள்ளது. அது தொடர்பிலான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 08.09.2017முதல் நடைபெற்றுவரும் போராட்டம் தொடர்பில் எமது பொதுச் சபையின் நிலைப்பாடு எமது...

காட்டை விட்டு வீதிக்கு வரும் யானைகள்! : அச்சத்தில் நெடுங்கேணி பொதுமக்கள்

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக பயணித்தோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நேற்று மாலை முதல் குறித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக அச்சத்துடனேயே பலரும் அவ்வீதியில் பயணங்களை மேற்கொண்டதாகவும், அப்பகுதியில் தற்போது மாலை நேரங்களில் யானைகள்...

வித்தியா கொலை வழக்கு: உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர்?

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்றும், வழக்குத் தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றதெனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த இரு...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை: சந்தேகநபர்களுக்கு பிணை!!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவர்கள் ஐவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரிய விண்ணப்பம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த சந்தேகநபர்கள்...

சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர் மீது பொலிஸில் முறைப்பாடு!!

மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அணுகியதோடு, அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படமாகவும்...

முதலமைச்சர் பாரமுகமாக நடந்து கொள்வது ஏன் : புத்தூர் மக்கள்

தமது சாத்வீகப் போராட்டம் 64 நாட்களினை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில், அவர் தமது கோரிக்கையினை கேட்டறியக் கூட முன்வரவில்லை என புத்தூர் கலைமதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். புத்தூர் கலைமதி பகுதியில் அமைந்துள்ள இந்துமயாணத்தினை அகற்றுமாறு கோரி பிரதேச...

வடக்கின் கருத்துக்களை தென்பகுதி ஊடகங்கள் முரணாக வெளியிடுகின்றன! : முதலமைச்சர் சி.வி

வடக்கு மாகாணத்தில் தான் தெரிவிக்கும் கருத்துக்களை தென்பகுதி ஊடகங்கள் முற்றிலும் முரணான வகையில் சித்தரித்து செய்தி வெளியிட்டு தன்னை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்வதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம்மேற்கொண்ட சுதந்திர ஊடக இயக்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு...

சங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து விவேகம் படத்தை சிவா இயக்கி இருந்தார். கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித்துக்கு கையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம்...

யாழில்.ஊடகவியலாளர் வீட்டில் 51 பவுண் நகை திருட்டு

யாழில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் 51 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் வசிக்கும் சிரேஸ்ட ஊடகவியலாளரான இரட்ணம் தயாபரனின் வீட்டிலையே இந்த திருட்டு சம்பவம் நேற்று புதன் கிழமை மதியம் இடம்பெற்று உள்ளது. வீட்டில் இருந்து கணவன் , மனைவி வேலைக்கு சென்று இருந்த சமயம் பிள்ளைகள்...

யாழில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தேங்காய் உடைத்து போராட்டம்

வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்று சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் நேற்று (13) நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும்...

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்

ஜனாதிபதி கையொப்பமிட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் (12) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் நடைமுறைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவது அவசியமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதி...

இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து போராட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய ஐந்து பேரது இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய வேளையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் ஒன்று திரண்டு மேற்படி...

கஞ்சா பயிரிடும் இலங்கை இராணுவம்!

நாட்டில் யுத்தம் இல்லாததால், இராணுவ வீரர்களைக் கொண்டு கஞ்சா வளர்க்கும் முயற்சியை மேற்கொள்வதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அவசியமான மூலிகை மருத்துவத்திற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் கஞ்சா மற்றும் அபின் என்பவற்றை வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்களின் அடிப்படையில், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்ததாகவும்...

பகல் கொள்ளையில் ஈடுபட்டவர் பொதுமக்களினால் நையப்புடைப்பு

பருத்தித்துறை –யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து பகல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் நேற்று(13) மதியம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட முற்பட்ட சமயம் குறித்த நபர் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். பிடித்த இளைஞனை அப் பகுதி...

வித்யா படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி!!!

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கின் தீர்ப்பு நாளாக எதிர்வரும் 27ஆம் நாள் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நீதாயவிளக்க மன்று முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் ஜனாதிபதி தலைமையில் தேசிய விவசாய வாரம்!

தேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் ஒருவார காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னாயத்தமாக மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று...
Loading posts...

All posts loaded

No more posts