நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுதினத்தினை குழப்பிய நிதி நிறுவனம்!!

தமிழ்மக்களின் விடிவிற்காய் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட தியாகி திலீபனின் நினைவுதினம் நேற்று (15-09-2017) அவர் உயிர்நீத்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இடம்பெறும் அதே நேரத்தில் தூபிக்கு முன்னதாக நிதிநிறுவனமொன்று இந்த நிகழ்வை குழப்பும் வகையில் பாரிய சத்தத்துடன் பாடல்களையும் இசையையும் ஒலிபரப்பி இடையூறு விளைவித்துள்ளது....

ரஜினியுடன் இணைந்து அரசியலில் பணியாற்றத் தயார் : கமல்

ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மக்கள் விரும்பினால் தாம் அரசியலுக்கு வரத் தயார் என்றும், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அத்துடன்,...
Ad Widget

இலங்கை தெரிவுக் குழுவுக்கு புதிய தலைவர் கிரகம் லெப்ரோய்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரகம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயற்பட்ட ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் இலங்கை அணிக்காக 9 டெஸ் போட்டிகளிலும் 44 ஒரு நாள் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது

மருந்தை மாற்றிக்கொடுத்ததால் சிறுமி மரணம்

பெண்ணொருவர், தனது நான்கு வயது மகளுக்கு பிரிட்டோன் மருந்துக்கு பதிலாக வேறொரு மருந்தை மாற்றிக்கொடுத்ததால், அச்சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் கட்டைப்பரிச்சானை சேர்ந்த சிவகாந்தன் பிறெஸமி (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு தடிமல் ஏற்பட்டமையால், அவரது தாய், பிரிட்டோன் மருந்தை பருகக் கொடுத்துள்ளார்....

கிபீர் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 1999.09.15 அன்று இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் பகுதியில், நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24 பொதுமக்கள் பலியாகியிருந்தனர். வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஏற்பாடு...

கலைமதி கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்.புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். புத்தூர் மேற்கு கலைமதி குடியிருப்பின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றக்கோரி பிரதேச மக்கள் நேற்றுடன் 66 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று காலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாகவும்,...

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு வவுனியா வளாக ஊழியர்கள் ஆதரவு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களது நீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.பூங்கண்ணன், செயலாளர் எம்.முகுந்தகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”யாழ்....

வட. மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று மின் தடை!

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மானிப்பாயின் ஒரு பகுதி, கரம்பைக் குறிச்சி ஆகிய பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 09 மணி முதல்...

பொலிஸார் பாராபட்சம்!

மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த சிலர் மது போதையில் அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் மாங்குளம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் அதற்கு...

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குள் பிளவா?

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் குறித்த சட்டமூலம் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு...

2020 இல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் அடிப்படை சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண சாரதி ஒருவரின் அடிப்படை சம்பளம் 28 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கும்...

இனந்தெரியாத காய்ச்சலினால் 11மாத குழந்தை உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11மாத குழந்தை ஒரு சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்துள்ளதாக யாழ்போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. கனிஸ்ரன் கிருஷ்ரவேலா தம்பதிகளின் 11 மாதக்குழந்தையான எஸ்தார் என்ற பெண்குழந்தையே இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தயார் வழமையாக சிறுகுழந்தைகளுக்கு...

விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வடபிராந்திய பேருந்து உரிமையாளர்கள்!!

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகன எரியூட்டல் தொழில்நுட்பத்தை தற்பொழுது வடபிராந்திய பேருந்து ஊழியர்களும் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குறைந்த செலவில் அதிக இலாபத்தினைப் பெறமுடிவதாக சம்மந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனியார் போக்குவரத்துத் துறையில் காணப்படும் போட்டித்தன்மைகளாலும் எரிபொருள் விலையேற்றங்களினாலும் குறுந்தூர மற்றும் நெடுந்தூர பேருந்து உரிமையாளர்கள்...

குப்பை சேகரிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு யாழ் மாநகர சபையின் அறிவித்தல்!

யாழ் மாநகர சபையினால் பொதுமக்களுக்கு குப்பை சேகரிப்பது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. சபையினால் புதிதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையின் பிரகாரம் குப்பை சேகரிக்கும் ரக்டர்கள் தங்கள் வீதிகளுக்கு சுழற்சிமுறையில் வருகைதர இருக்கின்றன. தங்களால் உருவாக்கப்பட்ட / உருவான குப்பைகளை உக்கக் கூடியன , உக்கமுடியாதன, இலத்திரனியல் கழிவுகள் என வேறுவேறாகத் தரம்பிரித்து குறித்த...

புதுக்குடியிருப்பில் தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். மேற்படி நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.

தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம்

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூர் தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் காலை 10.10 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக கடந்த 23...

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை ஆராய்வு!

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் அன்றையதினமே, தீர்மானிக்கப்படும் என்று, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின்...

கடமைக்கு வராத ஊழியர்கள் பணிநீக்கம்: அரசாங்கம்அறிவிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கடமைக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன் இன்று காலை 8.30 இற்கு கடமைகளுக்குச் சமூகமளிக்காதவர்கள் வேலையிலிருந்து விலகியவர்களாகக் கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றையதினம் மின்சக்தி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மின்சாரத் தொழிற்சங்க சம்மேளனம் மீண்டும் தமது பணிப்புறக்கணிப்பை...

துன்னாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவர் கைது!

வடமராட்சி கிழக்கில் அண்மையில் பொலிஸாரின் துப்பாச்சிச்சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்தினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலைவேளை துன்னாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை...

காலநிலையில் மாற்றம்: நாளை முதல் கடுங்காற்று!

நாட்டில் வடக்கு வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோர பிரதேசங்களில் நாளை முதல் பலத்த காற்றுவீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை)...
Loading posts...

All posts loaded

No more posts