Ad Widget

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குள் பிளவா?

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டமூலம் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது.

இவ்வாறான பின்புலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் எனவும் அவர் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் ஈ.பி.ஆர.;எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினருமான இரா.துரைரட்ணம் அதனை ஆதரித்திருந்தார்.

கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர. எல்.எப் தவிர்ந்த வேறு சில உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்திருந்தமையும் சுட்டிகாட்டதக்கது.

இதனை மையப்படுத்தி அந்த கட்சிக்குள் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சிக்குள் இரு அணிகள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts