Ad Widget

குப்பை சேகரிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு யாழ் மாநகர சபையின் அறிவித்தல்!

யாழ் மாநகர சபையினால் பொதுமக்களுக்கு குப்பை சேகரிப்பது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சபையினால் புதிதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையின் பிரகாரம் குப்பை சேகரிக்கும் ரக்டர்கள் தங்கள் வீதிகளுக்கு சுழற்சிமுறையில் வருகைதர இருக்கின்றன.

தங்களால் உருவாக்கப்பட்ட / உருவான குப்பைகளை உக்கக் கூடியன , உக்கமுடியாதன, இலத்திரனியல் கழிவுகள் என வேறுவேறாகத் தரம்பிரித்து குறித்த ரக்டர்களிடம் வழங்குமாறு தயவாகக்கேட்டுக்கொள்கின்றோம்.

ஒவ்வொரு வீதியிலும் உள்ள குப்பைகளை எடுத்து அந்தந்த வீதிகளிலேயே கொட்டி தாமே தரம்பிரிக்க வேண்டியிருப்பதாகத்தொழிலாளர்கள் அலுத்துக்கொள்கின்றனர்.

அதேவேளை தரம் பிரிக்காத குப்பைகளை எவ்விதக் காரணங்கள் கொண்டும் ரக்டர்களில் ஏற்றக்கூடிய சந்தர்ப்பமும் தொழிலாளிகளிடம் இல்லை. எமது குப்பை சேகரிக்குமிடங்களில் தரம்பிரித்தல் மிகக் கடுமையாகச் சோதிக்கப்படுகின்றது. அத்தனை குப்பைகளையும் சேர்த்துத்தரம்பிரித்தல் என்பது குப்பை மேடுகளை உருவாக்கும் சந்தர்ப்பங்களை நீங்களே ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். ஆகவே சொற்ப நேரம் எடுத்து எம் கோரிக்கைளைச் செவிசாய்த்துச்செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் நீங்கள் தரம்பிரித்து வைக்கப்பட்ட குப்பைகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குகின்ற / பணம் கேட்கின்ற / ஏதேனும் சாக்குப்போக்குச்சொல்கின்ற சந்தர்ப்பம் எதுவாயினும் உடனடியாகக் குறித்த ரக்டரின் இலக்கத்துடன் புகைப்படமொன்றை எடுத்து நேரடியாக மாநகர ஆணையாளரின் 0773868567 என்ற தொலைபேசிக்கு / வைபருக்கு ( Viber) உடனடியாக அனுப்பிவைக்கமுடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குப்பை சேகரிக்கும் ரக்டர் நிரம்பியிருக்கும் சந்தர்ப்பத்திலும் தங்களால் தரம்பிரிக்கப்படாத நிலையிலும் குப்பைகளைத் தொழிலாளிகள் எடுக்க மறுத்துக்கொள்வார்களாயின் அதனை நீங்களாகவே உணர்ந்து அடுத்த சுழற்சி முறையில் வழங்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தரம்பிரித்தலானது இன்றைய நாட்களில் ஏன் வலியுறுத்தப்படுகின்றது என்பதை கட்டாயம் ஒவ்வொருவரும் பகுத்தாய்ந்து எமது முறைமைகளைச் சீராக நகர்த்த கைகொடுப்பீர்கள் என நம்புகின்றோம்.

அட்டவணையின் முழுவிபரத்தையும் தெளிவாக எமது www.jaffna.mc.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் …..

எப்போதும் சபை உங்கள் நலனுக்காகவே……….

அட்டவனையினை நேரடியாக பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்

Related Posts