Ad Widget

நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுதினத்தினை குழப்பிய நிதி நிறுவனம்!!

தமிழ்மக்களின் விடிவிற்காய் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்ட தியாகி திலீபனின் நினைவுதினம் நேற்று (15-09-2017) அவர் உயிர்நீத்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இடம்பெறும் அதே நேரத்தில் தூபிக்கு முன்னதாக நிதிநிறுவனமொன்று இந்த நிகழ்வை குழப்பும் வகையில் பாரிய சத்தத்துடன் பாடல்களையும் இசையையும் ஒலிபரப்பி இடையூறு விளைவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் வடமாகாணசபை உறுப்பினர் ஆணோல்ட் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை அஞ்சலிக்கு சென்றிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அஞ்சலி நிகழ்வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராசையா கதிர் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , சிவநாதன் வேந்தன் , சின்னத்தம்பி வேந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts