வடக்கின் கருத்துக்களை தென்பகுதி ஊடகங்கள் முரணாக வெளியிடுகின்றன! : முதலமைச்சர் சி.வி

வடக்கு மாகாணத்தில் தான் தெரிவிக்கும் கருத்துக்களை தென்பகுதி ஊடகங்கள் முற்றிலும் முரணான வகையில் சித்தரித்து செய்தி வெளியிட்டு தன்னை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்வதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்குப் பயணம்மேற்கொண்ட சுதந்திர ஊடக இயக்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்பது நன்றெனத் தெவித்தார்.

அத்துடன் தான் தெரிவிக்கும் கருத்துக்களை வடக்கிலுள்ள சில ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இதனால் மக்களுக்கு தவறான புரிதல் ஏற்பட வழிவகுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தென்பகுதி பத்திரிகைகளைத் தான் வாசிப்பதில்லையெனவும் தெரிவித்த அவர், இதற்கு வேலைப்பழு மட்டும் காரணமில்லையெனவும், நேரம்பிந்திய நிலையில் அப்பத்திரிகைகள் விநியோகிக்கப்படுவதே காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் தான் தெரிவிக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக முரண்பட்ட வகையில் திரிபுபடுத்தி தென்பகுதி பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இதனால், என்னைப் பயங்கரவாதியாக சித்தரிக்கவும் முயல்கின்றன எனவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts