Ad Widget

முதலமைச்சர் பாரமுகமாக நடந்து கொள்வது ஏன் : புத்தூர் மக்கள்

தமது சாத்வீகப் போராட்டம் 64 நாட்களினை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில், அவர் தமது கோரிக்கையினை கேட்டறியக் கூட முன்வரவில்லை என புத்தூர் கலைமதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

புத்தூர் கலைமதி பகுதியில் அமைந்துள்ள இந்துமயாணத்தினை அகற்றுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த ஜீலை மாதம் ஆரம்பிரத்த சாத்வீக போராட்டம் 64நாட்களை கடந்தும் எந்துவித தீர்வும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

“தென்னிலங்கை பகுதியில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட மக்கள் எமதுபோராட்ட இடத்திற்கு வருகை தந்த எமது கோரிக்கை நிஜயமானது என கூறி ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும், அன்மையில் விஜயம் செய்த வடக்குமாகாண ஆளுர் எமது கோரிக்கையினை ஏற்றுகொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்த போதும் முதலமைச்சர் பாரமுகமாக நடந்து கொள்வது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எமது கோரிக்கை நிஜயமானதா அல்லது, நிஜயத்திற்கு புறம்பானதா என்பதனை நேரில் வந்து பார்வையிடுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கனிசமான கோரிக்கையினை விடுக்கின்றனர்.

புகைத்தல் புற்றுநோயினை உண்டாக்கும் என கூறி பல்வேறு பதாகைகள் வாகனங்களிலும் பொதுவிடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இறந்த ஒருவரினை எரிக்கும் போது அதில் இருந்து வெளிவரும் புகை, மனித உடல்நலத்திற்கு உகந்ததா? பிணப்புகையினை சுவாசிக்க நாங்கள் விலங்குகளா என ஆதங்கப்படுகின்றனர்.

இவர்கள் எமது ஊரிணை சுற்றி 4 இந்து மாயணங்கள் இருக்கும் போது ஒரு சிலரின் ஆதிக்கபோக்கான தன்மையே கைவிடப்பட்டிருந்த இந்துமயாணத்தினை மீளவும் கட்டுமாணப்பணிக்கு உட்படுத்தும் நிகழ்வு என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சர் என்ற ரீதியில் சரியான முடிவு எடுக்கவேண்டியது முதலமைச்சரே ” எனத் தெரிவித்துள்ளனர்.

Related Posts