அரசுக்கு எதிராக போராடியவர்கள் பயங்கரவாதிகள் அல்ல! : கஜேந்திரகுமார்

இலங்கை அரசுக்கு எதிராக போராடிய அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பார்ப்பது தவறு என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரை் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அணைவரும் பயங்கரவாதிகளே அவர்கள் யாரும் அரசியல் கைதிகள் அல்ல என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியதற்கு பதில் தரும் வகையில் நேற்று(திங்கட்கிழமை) கருத்து வெளியிடும் போதே...

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற...
Ad Widget

வடக்கில் மலேரியாவை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை

வடக்கில் மலேரியா பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா. குணசீலன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையிலான குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

அகநானூறு, புறநானுறு போன்ற இலக்கியங்களில் மாத்திரமே பிரபாகரனை போன்ற வீரனை பார்க்க முடியும்! : பாரதிராஜா

இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாகவும், அச் சந்தர்ப்பத்தில் இலங்கை போர் தொடர்பில் ஒரு படத்தை இயக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனை...

பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி!! இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி!!

2 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் தமது துடுப்பாட்டத்தின் போது 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 48 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் ஈட்டியது. உப்புல் தரங்க 112 ஓட்டங்களை அணிக்காக...

யாழ். புகையிரத சேவை எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில்...

சம்பந்தன் தமிழ் மக்களை அவமதித்துள்ளார்!: கஜேந்திரகுமார்

“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்” என தமிழ்தேசிய...

ஆளுநரைச் சந்தித்தது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று காலை ஒன்பது மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு, சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநரின் பங்களாவில் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தைத் பெற்றுத் தருமாறு சந்திப்பின்போது மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது

அடுத்த தீபாவளி ஒளிமயமாய் இருக்கும் என்கிறார் சம்பந்தன்

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அடுத்த வருட தீபாவளி பண்டிகை இந்த வருடத்தை விட மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமையுமென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித்...

யாழில் டெங்கு நோய் தாக்கத்தால் பாடசாலை மாணவி உட்பட இருவர் பலி

இலங்கையின் தென்னிலங்கையை ஆட்டிப்படைத்த பாரிய உயிர்க்கொல்லி நோயான டெங்கு, தற்போது வடக்கு மாகாணத்திலும் தீவிரமாக பரவியுள்ளது. டெங்கு நோய் தாக்கத்தால், யாழ்ப்பாணத்தில் தாயொருவரும் பாடசாலை மாணவி ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். யாழ். பொஸ்கோ பாடசாலையில் கல்வி கற்று வந்த கணேசமூர்த்தி சாரா (வயது-9) என்ற மாணவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...

தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை பாதிப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22 நாட்களாக இவர்கள் உணவை தவிர்த்து வரும் நிலையில், இரண்டு கைதிகளுக்கு சேலைன் ஏற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக...

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டவர் மரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது. ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம்...

வடக்கின் அடுத்த முதலமைச்சராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்?

வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து...

தொண்டர் ஆசிரிய நியமன முறைகேடு: மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரி கடிதம்!

தொண்டர் ஆசிரிய நியமன நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரி அவசர கடிதம் ஒன்றினை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது. வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி...

வடக்கு மாகாணத்தின் கலாசாரம் அபாய நிலையில் இருக்கிறது: சர்வேஸ்வரன்

வடக்கு மாகாணத்தினுடைய அடையாளம், கலாசாரம் என்பன தற்போது அபாய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து...

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அக்கறை இல்லை: ரவூப் ஹக்கீம்

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மட்டக்களப்பு,காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர்...

தமிழர் தாயகத்தில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி! : திட்டமிட்ட சதியா?

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ் மக்கள் யாவரும் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டுமென குறிப்பிட்டு வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த சுவரொட்டிகளில் சிவசேனா அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ் அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு விற்பனைக்கு வருமுன், பல கைகள் மாறியே வருகின்றது. அந்தக் கைகளுக்குள்...

வடக்கு ஆளுநரை சந்தித்த உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உறவினர்கள்

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரேயை சந்தித்துள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, மதியரசன் சுலக்சனின் தாய் மற்றும் சகோதரி, இராசதுரை திருவருளின் மனைவி, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கணேஷ் வேலாயுதம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் கூட்டமைப்பு!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், குழுக்கள் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “சட்டத்தின் தேவைகளுக்கு அமைய...

விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை!: பொன்சேகா

சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்...
Loading posts...

All posts loaded

No more posts