Ad Widget

பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் கூட்டமைப்பு!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், குழுக்கள் 25 வீதம் பெண் வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சட்டத்தின் தேவைகளுக்கு அமைய நாங்கள் செயற்படுவோம். பெண்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம்.

வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாவிடின், பெண்கள் அமைப்புகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் தலைமை தாங்கும் பெண்களில் இருந்து தெரிவு செய்வோம்.

இளையவர்களை அரங்கிற்குக் கொண்டு வருவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். தேர்தல் பரப்புரைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணம் செலவிடவில்லை. வேட்பாளர்கள் தமது பணத்தைச் செலவிட விரும்பினால் அப்படிச் செய்யலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts