சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை பயன்படுத்தியமைக்கு வடக்கு அவைத்தலைவர் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட முனைக்கின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப பாடல்களை ஒலிக்கவிட்டு தமது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தமையை வண்மையாக்க் கண்டிக்கின்றேன்" இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா...

தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு இடமாற்றம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவிருந்த கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வானது அக் கலையரங்கம் பயன்படுத்துவதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டதால் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் அறிவித்துள்ளார்கள்.
Ad Widget

“சுமந்திரன் ஒரு தேசத்துரோகி“ : மண் தூவி சாபமிட்டு ஒப்பாரி வைத்து அழுத காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு தேசத் துரோகி எனத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு மண்ணை அள்ளித் தூற்றியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் கையளித்தும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324 ஆவது நாளை...

மதுபான வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்படும்: ஜனாதிபதி

அண்மையில் மதுபானம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். அஹலவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவிப்பு நாளை ( இன்று திங்கட்கிழமை) தொடக்கம் ரத்து செய்யப்படும்...

தமிழர் பிரதேசங்களில் இராணுவம் நிலை கொண்டிருப்பது ஆபத்து: ஆனந்தசங்கரி

தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலை கொண்டிருப்பது ஆபத்து என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “தற்போது எங்குமே யுத்தம் நடைபெறவில்லை என்பதால் இராணுவத்தின் பிரசன்னம்...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழ் ஒன்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிவித்துள்ளது. எனினும் இச்சட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிவிலக்கு...

தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள்: சந்திரிக்கா

தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெயங்கோட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள். என்றாலும் அமைச்சர்களும்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்: உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருந்தது. இது கடுமையான வாதப்பிரதி வாதங்களை தோற்று...

சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

இலங்கையில் சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டை விடவும், 2017ம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29 தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் சீமெந்து விற்பனை வீழ்ச்சியால், கட்டுமானத்துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்ய சட்ட ரீதியிலான அனுமதி

வாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்யும் அனுமதியை சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சஞ்சீவ பந்துகீர்த்தி இதுதொடர்பாக தெரிவிக்கையில் . தமது அவயவங்களை தானம் செய்ய விரும்புவோர் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அதனை குறிப்பிடுவதன் மூலம் இந்தப் பணியை துரிதமாக மேற்கொள்ள முடியும்...

பிள்­ளை­க­ளின் எதிர்­கா­ல நலனில் அக்கறை கொண்டு அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­துங்­கள் : யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஒழுக்­கம் மிக­வும் மோச­மான நிலை­யில் உள்­ளது. இங்கு வாழ்­ப­வர்­க­ளில் அதி­க­மா­னோர் சட்ட ஒழுங்­கு­களை மதிப்­ப­தில்லை. இவ்­வாறு யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் விஜிர குண­ரத்ன தெரி­வித்­தார். யாழ்.மாவட்­டத்­தில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­க­ளின் பெற்­றோர்­க­ளுக்­கும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்­கும் இடையே யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலையக் கேட்­போர் கூடத்­தில் சந்­திப்பு நடை­பெற்­றது. அதில் கருத்­துத்...

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு இந்­தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன்

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை நேற்று சந்­தித்துப் பேசி­ய­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு கோரி­யுள்ளார்.வடக்கின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் மற்றும் வாழ்­வா­தார நகர்­வு­களை கையாள்­வது குறித்து இந்­திய உயர்ஸ்­தா­னிகர் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ருக்­கி­டையில் நேற்று பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது....

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் (ரூபா 6.9 பில்லியன்) அமெரிக்க டொலர் நிதியினை இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை புதுடில்லியில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா (David Rasquinha) மற்றும் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்எச்எஸ் சமரதுங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய...

வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் இல்லை!

வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்க பெறவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்றயதினம் யாழில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது...

உரிமையை காகிதத்தில் வாங்கி என்ன பயன்? அங்கஜன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணி உரிமை மற்றும் காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் நேற்றய தினம் (வெள்ளிக்கிழமை) யாழில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்...

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக முக்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக யாழ்.மாநகர சபைக்கு, மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நேற்றயதினம் (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதிமன்றில் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் குறித்த உத்தரவிரனை பிறப்பித்தார். இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் குப்பைமேட்டினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் எனவும்,...

தேர்தலில் சிறந்தவர்களை தெரிவு செய்யுங்கள்: ஜனாதிபதி

நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்ய வேண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் ஊழல் மோசடியற்ற மக்கள் சார்பு...

11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட விவகாரம்: 6 மாதங்களுக்குப் பின் பிணை

தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களையும் விடுவித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை...

தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: யாழ்.பல்கலைகழக பதிவாளர்

யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து...

ஐ.நா.வில் இலங்கை மீது அதிருப்தி வெளியிடவுள்ள ஹுசைன்?

ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதன்போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால்...
Loading posts...

All posts loaded

No more posts