Ad Widget

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை பயன்படுத்தியமைக்கு வடக்கு அவைத்தலைவர் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட முனைக்கின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப பாடல்களை ஒலிக்கவிட்டு தமது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தமையை வண்மையாக்க் கண்டிக்கின்றேன்”

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, யாழ்ப்பாணத்தில் நடத்திய தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிபெருக்கியது. இது தமிழ், சிங்கள ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியாகியிருந்த்து.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்தச் செயற்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு சுதந்திரமுண்டு. ஆனால் சுதந்திரக் கட்சியினருடைய இந்தச் செயற்பாடு அத்துமீறியதாக உள்ளது. மக்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள்.

தமழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் இன்று அந்த அமைப்பின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது தவறு.

ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களின் இந்தச் செயற்பாடு அண்ணாந்து பார்த்துத் துப்புவதற்குச் சம்மானதாகும்.
கொள்கை வங்குரோத்து நடவடிக்கையே இது. தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. எமது மக்களுக்கு அரசியல் தெளிவில்லை சிலர் நினைக்கலாம். ஆனால் அன்னப்பறவைகள் போல் அனைத்தையுமே பகுத்தறியும் சக்தி எமது மக்களுக்கு உண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts