மதுபானச்சாலைகளில் பணியாற்ற பெண்களாலும் முடியும்: பொன்சேகா

பெண்கள் மதுபானச்சாலைகளில் பணியாற்ற இடமளிப்பது தற்போது நாட்டில் பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில், பெண்களால் எந்த வேலைகளையும் செய்ய முடியும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் சில...

அரசாங்கம் தருவதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எமக்கில்லை: வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

”தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம்மீது திணிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் இன்னும் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராதவர்கள் வடக்கு கிழக்கை ஆட்சிசெய்ய, அவர்களின் கீழ் நாம் வாழும் நிலை ஏற்படும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்...
Ad Widget

த.ம.பேரவையின் கூட்டத்தை தடுக்க முனைவது தமிழர் அரசியலுக்கு நல்லதல்ல: சட்டத்தரணி குருபரன்

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதென யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். தமிழர் அரசியல் போக்கில் இது சரியான பாதையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம்...

நெடுந்தீவில் 16 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களது 4 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் பாலத்தின் கீழிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி, பன்னங்கண்டி பாலத்தின் கீழிருந்து ஆணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வட்டக்கச்சி மாயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக பயணித்தவரே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

போட்டிக் கல்விமுறைமை மாணவர்கள் மனதில் பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்க்கிறது : பொ.ஐங்கரநேசன்

போட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைக் கண்டறிந்து உரிய நேரத்தில் அணைக்கத்தவறுவார்களாயின் இதுவே பின்னாளில் எந்தக் குறுக்குவழியில் சென்றேனும் எந்தச் சதியைச் செய்தேனும் தான் விரும்பிய இலக்கை அல்லது பதவியை அடைவதற்கு அவர்களைத் தூண்டுகிறது என்று தமிழ்த்தேசியப்...

தமிழ் மக்கள் குரலாக ஒலிக்க சந்தர்ந்தம் வழங்குங்கள்: விமல் ரத்நாயக்க

வடக்கு மக்களின் குரலாக ஒலிப்பதற்கு, தமிழ் மக்கள் எமக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கோரியுள்ளார். யாழில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த...

தமிழர் விடுதலை கூட்டணியை கைப்பற்றவே மாவைசேனாதி ராஜா என்னை கொலை செய் முயற்சி செய்தார் : வீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலை கூட்டணியை கைப்பற்றவே மாவைசேனாதி ராஜா என்னை கொலை செய் முயற்சி செய்தார் முடியவில்லை சாதனைத்தழிழன் வீ.ஆனந்தசங்கரி தினப்புயல் களம் நேர்காணலின் போது விடுதலைப்புலிகளை நீங்கள் ஏகபிரதிநிதகளாக ஏற்றுக்கொள்ளத காரணத்தால் தான் உங்களை துரோகிகள் என்று பலரும் கருதுகிறார்கள் இது உண்மைதானா? இல்லை அப்படியாயின் நடந்தது என்ன?த தினப்புயல் களம் நேர்காணலின்போது வீ.ஆனந்தசங்கரி தீர்வு...

முன்அறிவிப்பு இன்றி பணி நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்

தமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் முன்அறிவித்தல் இன்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ம்...

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இலவச டெப்லட் வழங்கப்படும்: கல்வியமைச்சர்

போட்டிமிக்க உலகத்திற்கு முகம் கொடுக்கும் வகையிலும், சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு இசிபத்தான கல்லூரியில் இடம்பெற்ற, முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,...

இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் பொய்ப்பிரசாரம்: கஜேந்திரகுமார்

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், இடைக்கால அறிக்கையில் இல்லாத விடயங்கள் கூட மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் இடைக்கால அறிக்கையினை முழுமையாக வாசிக்க மாட்டார்கள் என்ற நிலையில், இவ்வாறு பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள்...

யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

யாழில் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது...

புன்னாலைக்கட்டுவனில் த.தே.கூ. பிரசாரக்கூட்டத்தில் வேறு கட்சி வேட்பாளர் அடாவடி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபையின் 05ஆம் வட்டாரமான புன்னாலைக்கட்டுவனில் போட்டியிடும் வேட்பாளர்களான கெங்காதரன் மற்றும் ஈவினை மாதர்சங்கத்தலைவி ரதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது, வேறு கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கூட்டத்தையும் குழப்பியுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது. ஈவினை தெற்கு கிராம அபிவிருத்திச்சங்க...

அரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சி தொடர வேண்டும்: சுமந்திரன்

நல்லாட்சி அரசு நிலைத்து இருப்பதன் ஊடாகவே புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை (17.01.2018) புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. நாளை முற்பகல் 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய...

பட்டத்திருவிழா பார்க்க யாழ் வந்த அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார் !

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று விமானம் மூலம் வருகை தந்த அமைச்சர் மகிந்த அமரவீர தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்று செய்தி வெளியாகி உள்ளது. வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற பட்டத் திருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் விமானிக்கு பலாலி...

தேர்தல் வன்முறைகள்: 19 வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட நபர்களுள் 19 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 57 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 120 பேரில்...

இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு 98 ஆண்டுகள்: மக்கள் கொண்டாட்டம்

கிளிநொச்சி இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு நீர்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 98 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) பொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், இரணைமடு விவசாய சம்மேளன விவசாயிகளால் பொங்கல் பொங்கப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட...

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்

தைத்திருநாளினைக் கொண்டாடும் மக்களுக்கு நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்தி...

யாழ்ப்பாணம் வந்த கடுகதி ரயிலில் தீ விபத்து!!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று நண்பகல் வந்த குளிரூட்டப்பட்ட தொடருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப்புறப்பட்ட தொடருந்து சாவகச்சேரி மீசாலை பகுதியில் வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து தொடருந்து நிறுத்தப்பட்டு , யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு...
Loading posts...

All posts loaded

No more posts