இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

நல்லிணக்கம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபையில் பொறுப்புகூறல் ஆகிய விடயங்களில் இலங்கை தற்போதும் மந்தகதியிலேயே செயற்பட்டுவருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆட்சிமாற்றத்தில் பின்னர் இலங்கையில் ஊடகங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு...

யாழில் கோடுரம்!!! : 3வயது குழந்தை வெட்டிப் படுகொலை!!!

வண்ணார்பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோயிலடியில் 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டாள். அவளது பேத்தியான குடும்பப் பெண் வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... மன நோயாளி எனத் தெரிவிக்கப்பட்டவரே தனது இளைய சகோதரனின் மகளை வெட்டிக் கொலை செய்ததுடன், தனது தாயையும் வெட்டிச்...
Ad Widget

தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் இலங்கை அகதிகள்: தற்கொலைகள் அதிகரிப்பு!

தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் வாழும் இலங்கை அகதிகளின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பிரதான வைத்திய அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 61,845 பேர் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் தங்கியுள்ளதாகவும், இவர்களில் அதிகளவானோர் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான தற்கொலைகளைத் தடுப்பதற்காக முகாம்களிலுள்ள மக்களுக்கு ஆரம்ப ஆற்றுப்படுத்தல்...

தேர்தலூடாக தென்னிலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டும்!! : ஜனநாயக போராளிகள் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கூடாக தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பொன்று நேற்று (வியாழக்கிழமை) பகல் பாலையடிவட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது ஜனநாயக போராளிகள்...

ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை தீயிட்டு எரிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து...

எமது வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டது: அங்கஜன்

எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டதெனவும் நீங்கள் அளிக்கும் வாக்குகள் எமது வாக்குறுதிகளை உறுதியாக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுதுமலை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச செயற்பாட்டு அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து...

14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இணைந்து செய்த நல்ல காரியம்!!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு வீடமைத்து வழங்குவதற்கான அடிக்கல் நேற்றயதினம் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடயவியல் பிரிவில் கடமையாற்றும் ஜனனி என்னும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, வீடு ஒன்றை நிர்மாணித்து...

நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் 24 இளைஞர்களை கைது செய்திருந்த நிலையில் அவர்கள் காணாமல்...

யாழ் பொலிஸ் உத்தியோகத்தரின் முன்மாதிரியான செயற்பாடு!

மாணவன் ஒருவரால் யாழ்.நகரில் தவறவிடப்பட்ட பணப்பையை (பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரிவாறு ஒப்படைத்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது. கொக்குவிலைச் சேர்ந்த மாணவன் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார். அந்தப் பணப்பை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு முனபாக வீதியில் கிடந்துள்ளது....

தேர்தலில் ஈ.பி.டி.பி அமோக வெற்றி பெறும்: டக்ளஸ் தேவானந்தா

மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்போகின்றோமா?: சம்பந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரப்போகின்றோமா என்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை நகரசபை வேட்பாளர்களுடனான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

மின்சார சபை ஊழியர்கள் நாடு பூராகவும் பணி நிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்....

யாழ். தனியார் வைத்தியசாலையில் நோய்த்தொற்று அபாயம்: குணசீலன்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உதவித் தொகை! பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்!!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார்துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளைக்குப் பொறுப்பான அதிகாரி இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா...

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை...

யாழ். பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் விரிவுரைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின் 3ஆம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே கடந்த 11 ஆம் திகதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கலைபீடத்தின் 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கும்...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 05 கோடி பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள்

காங்கேசன்துறை கடற்பரப்பில் ​வைத்து சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை (17.01.2018) கைப்பற்றப்பட்டுள்ளது. கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட வெற்று உரப்பபைகளில் இருந்து இவ்வாறான தங்க பிஸ்கட்டுக்களை கண்டெடுத்ததாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜெயந்த டி சில்வா தெரிவித்துள்ளர். ஒவ்வொன்றும் 100...

கிட்டுவை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததா கூட்டமைப்பு?

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. இதில்...

முன்னாள் புளோட் உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீடொன்றில் முன்னர் புளொட் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில்...

தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்: தேர்தல்கள் அலுவலகம்

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்று இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts