கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டதா? : மாவை விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக, தன்னைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய...

அரசியல்வாதிகளில் 50 சதவீதமானோர் திருடர்கள்! : ஜனாதிபதி ஆவேசம்

நாட்டின் அரசியல்வாதிகளில் நூற்றிற்கு 50 சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை திருடுகின்றனர் என்றும், இதனால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”அபிவிருத்தி அடைந்த...
Ad Widget

அபிவிருத்தி இன்மையினாலேயே களத்திற்கு வந்தோம் : சுயேட்சை வேட்பாளர்.

முப்பது ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியை முன்னெடுக்காததால், சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் என கேடயம் சின்னத்தினை கொண்ட சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாடி விருந்தினர் விடுதியில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . மேலும் அவர் கூறுகையில், “கடந்த காலங்களில்...

கதிர்காமத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!!

கதிர்காமம் நகரில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 58 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் முன் கூடிய மக்களால் அப் பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. எனவே,...

ஆனைக்கோட்டையில் வயோதிபப் பெண் அடித்துக் கொலை!

ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி, பிரதேசத்தில் தனிமையில் வசித்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா எனும் வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிற்கு உதவி புரியும் உறவினர் ஒருவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது...

50 வருடங்களின் பின் தமிழில் பொலிஸ் கீதத்தினை மொழிபெயர்த்த வவுனியா இளைஞன்!

50 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டுள்ளது. வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார். தமிழ் மொழி...

தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமை தேவை: சிவசக்தி ஆனந்தன்!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மாற்று அரசியல் தலைமை தேவை என்னும் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பெரியார்குளத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் கௌதமனை ஆதரித்து மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த காலத்தில் தமிழ்த்தலைமைகளை நம்பி வாக்களித்த மக்களின்...

உங்களால் முடியாவிட்டால் போங்கள்’: கஜேந்திரகுமார் கூட்டமைப்பின் மீது காட்டம்!

கூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு உரையாற்றியுள்ளார். இது குறித்து அவர்...

அபிவிருத்தியை முன்னிறுத்தி ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு, சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், யாழ். கந்தர்மடம் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து...

கொழும்பு- யாழ்பாணம் ரயிலை இடைமறித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா, ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து, கிராம மக்கள் ரயிலை மறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி ரயில் இரண்டு மணிநேரம் ஓமந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஓமந்தை...

மண்டைதீவுக் கடலில் வெடிபொருள்களுடன் மிதந்து வந்த பெட்டி மீட்பு!!

யாழ்ப்பாணம், மண்டைதீவுக் கடலில் மிதந்துவந்த மரப் பெட்டியொன்றிலிருந்து 4 கண்ணிவெடிகள் உள்பட வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். மண்டைதீவு கடலில் நேற்று மாலை 5 மணியளவில் பச்சை நிற மரத்தாலான பெட்டியொன்று மிதந்து வருவதை மீனவர்கள் சிலர் அவதானித்துள்ளனர். அதனையடுத்து அந்த சந்தேகத்திற்கு இடமான பெட்டி தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரனுக்கு மீனவர்களால்...

பல்கலை விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீட்டிப்பு

2017 - 2018ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்கும் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார். மேற்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாணவர்களின் நலன் கருதி...

“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல்

தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார். பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு,...

இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றி

நேற்று இடம்பெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை...

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை : வடக்கு முதல்வர்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் ஜனநாயக சூழ்நிலை விருத்தியடைந்திருப்பதில் சந்தேகம் இல்லை. வளமிக்க பெருமளவான தனியார் காணிகள் படையினர்...

பருத்தித்துறையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு கடூழிய சிறைதண்டனை

பருத்தித்துறையில் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றயதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன் குறித்த உத்தரவை பிறப்பித்தார். இதன்போது குற்றவாளிக்கு 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட...

பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 11 கிளிநொச்சி மாணவர்களில் 8 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் விடுவித்தார். கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக...

சட்டவிரோத கேபிள் ரீவி நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு

யாழில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரச அனுமதி பெற்று கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கும் ஏ.எஸ்.கே நிறுவனத்தால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாது, கேபிள் ரீவி இணைப்புகளை வழங்க, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன்...

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி : 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று!

நாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம். ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும். வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை,...

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையே மோதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. குறித்த மோதல் சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும் முன்னதாக பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர். அது தொடர்பில் தெரிய வருவதாவது, சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. பெரும்பான்மையின...
Loading posts...

All posts loaded

No more posts