Ad Widget

தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமை தேவை: சிவசக்தி ஆனந்தன்!

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மாற்று அரசியல் தலைமை தேவை என்னும் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பெரியார்குளத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் கௌதமனை ஆதரித்து மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த காலத்தில் தமிழ்த்தலைமைகளை நம்பி வாக்களித்த மக்களின் தேவைகள் எதுவும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ்த் தலைவர்கள் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

வடக்கு கிழக்கில் 70000 மேற்பட்டவர்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருக்கின்றது. இவற்றினை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவுமில்லை. எனவே தவறாக வழிநடத்தும் தமிழ்த் தலைமைகளுக்குப் பின் நின்று நாம் மக்களுக்குச் சேவையாற்ற நாம் தயாராகவில்லை” என தெரிவித்தார்.

மேற்படி மக்கள் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராசா, தியாகராசா மற்றும் வட்டார மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts