கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று நண்பகல் வந்த குளிரூட்டப்பட்ட தொடருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப்புறப்பட்ட தொடருந்து சாவகச்சேரி மீசாலை பகுதியில் வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து தொடருந்து நிறுத்தப்பட்டு , யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு சென்று தீயிணை அணைத்த பின்னர் தொடருந்து யாழ். புகையிரத நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இயந்திர கோளாறு காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.