Ad Widget

இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் பொய்ப்பிரசாரம்: கஜேந்திரகுமார்

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், இடைக்கால அறிக்கையில் இல்லாத விடயங்கள் கூட மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன.

மக்கள் இடைக்கால அறிக்கையினை முழுமையாக வாசிக்க மாட்டார்கள் என்ற நிலையில், இவ்வாறு பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை, தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறான வரவேற்பை பெறுகின்றது என்ற கருத்துக்கணிப்பாகவே இந்த உள்ளுராட்சித் தேர்தலைக் கூட்டமைப்பினர் கருதுவதாகவும் அவர் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

இந்த உள்ளுராட்சித் தேர்தலின் முடிவுகள் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான முன்னோடியாக கூட நாங்கள் கருதலாம். எனவே, இது பற்றிய அடிப்படை விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. ஏனெனில், பல பொய்ப்பிரசாரங்கள் இது தொடர்பில் மேடை தோறும் பேசப்படுவதாக கஜேந்திரகுமார் அங்கு மேலும் கூறினார்.

Related Posts