Ad Widget

பிள்­ளை­க­ளின் எதிர்­கா­ல நலனில் அக்கறை கொண்டு அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­துங்­கள் : யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஒழுக்­கம் மிக­வும் மோச­மான நிலை­யில் உள்­ளது. இங்கு வாழ்­ப­வர்­க­ளில் அதி­க­மா­னோர் சட்ட ஒழுங்­கு­களை மதிப்­ப­தில்லை. இவ்­வாறு யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் விஜிர குண­ரத்ன தெரி­வித்­தார்.

யாழ்.மாவட்­டத்­தில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­க­ளின் பெற்­றோர்­க­ளுக்­கும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்­கும் இடையே யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலையக் கேட்­போர் கூடத்­தில் சந்­திப்பு நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது-

போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை இங்­குள்ள வாகனச் சார­தி­கள் அறவே மதிப்­ப­தில்லை. அத­னா­லேயே அதிக வாகன விபத்­துக்­க­ளும் உயி­ரி­ழப்­புக்­க­ளும் ஏற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இங்­குள்ள வாக­னச் சார­தி­கள் உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பொறுப்­பற்ற வித­மாக வாக­னங்­க­ளைச் செலுத்­து­கின்­ற­னர். அவர்­கள் விபத்­துக்­குள்­ளாகி தங்­கள் உயிர்­க­ளை­யும் மற்­றை­ய­வர்­க­ளின் உயிர்­க­ளை­யும் எடுக்­கின்­ற­னர்.

வரு­டம் ஆரம்­பித்து ஒரு சில நாள்­களே ஆன நிலை­யில் யாழ்ப்­ப­ணத்­தில் நடந்த வீதி விபத்­துக்­கள் கார­ண­மாக பிஞ்­சுக் குழந்தை உட்­பட சிலர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். வீதி விபத்­துக்­க­ளைத் தடுப்­ப­தற்­காக நாம் பல முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றோம். வாக­னச் சார­தி­களை வழி மறித்து அவர்­க­ளுக்கு வீதி விபத்­துக்­கள் தொடர்­பில் விழிப்­பு­ணர்­வு­களை வழங்கி வரு­கின்­றோம். ஒவ்­வொரு கிரா­மங்­க­ளி­லும் ஒலி பெருக்கி ஊடாக மக்­க­ளுக்கு அறி­வூட்டி வரு­கின்­றோம்.

உங்­கள் பிள்­ளை­கள் யாழ்ப்­ப­ணத்­தில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற சமூக விரோதச் செயல்­க­ளு­டன் தொடர்­பு­பட்ட குற்­றச்­சாட்­டு­டன் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் இள­மை­யா­ன­வர்­கள். அவர்­களை இங்கு யாரும் இயக்­க­வில்லை. அவர்­கள் சினி­மாப் படங்­க­ளில் வரும் கதா­பாத்­தி­ரங்­கள் போல் ஒரு வாளை­யும் மோட்­டார் சைக்­கிள்­க­ளை­யும் எடுத்­துக் கொண்டு வீதி­யில் அட்­ட­கா­சம் புரிந்­துள்­ள­னர்.

இந்த நட­வ­டிக்கை எம்­மைப் பொறுத்த வரை­யில் சட்­டத்­துக்கு முர­ணான விட­ய­மா­கும். அத­னா­லேயே நாம் கைது செய்­தோம்.கைது செய்து விளக்­க­ம­றி­ய­லில் உள்ள உங்­க­ளின் பிள்­ளை­கள் நீதி­மன்­றால் தீர்ப்­ப­ளிக்­கப்­ப­டும் வரை நிர­ப­ரா­தி­கள். அவர்­கள் சில வேளை­க­ளில் பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்டு வெளி­யில் வர­லாம்.

சமூ­கத்­தில் நல்­லொ­ழுக்­கத்­து­டன் வாழ்­வ­தற்கு பெற்­றோர்­க­ளா­கிய நீங்­கள் புத்­தி­ம­தி­யைக்கூறி அவர்­களை நல்­வ­ழிப் படுத்­துங்­கள். உங்­கள் பிள்­ளை­கள் தற்­போது சிறிய குற்­றச்­சாட்­டு­க­ளில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இது உங்­க­ளுக்­குத் தெரி­யாது நீண்­ட­கா­ல­மா­கி­யி­ருந்­தால் அவர்­கள் பெரும் குற்­றங்­க­ளைச் செய்தி ருப்பார்கள். உங்­கள் பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லங்­க­ளில் நலன் கொண்டு அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­துங்­கள்.-என்­றார்.

எமது பிள்­ளை­கள் கைது செய்­யப்­ப­டும்­வரை அவர்­கள் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருந்­தார்­கள் என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது. உண்­மை­யில் சமூக விரோதச் செயல்­க­ளில் அவர்­கள் ஈடு­ப­ட்டார்களா என்­றும் எங்­க­ளால் தீர்­மா­னிக்க முடி­ய­வில்லை. நண்­பர்­க­ளு­டன் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் சென்று வரு­வார்­கள். இவ்­வா­றான செயல்­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருக்­கின்­றார்­கள் என எமக்கு இறுதி வரை தெரி­யாது. தெரிந்­தி­ருந்­தால் நாங்­கள் அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தி இருப்­போம். எமது பிள்­ளை­கள் இதனை செய்­தார்­கள் என்று இன்­றும் எங்­க­ளால் நம்­ப­மு­டி­ய­வில்லை என்று கலந்­து­ரை­யா­ட­லில் கலந்து கொண்ட பெற்­றோர்­கள் கண்­ணீர் விட்­ட­ழு­த­னர்.

Related Posts