தமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை!

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. அண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்....

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை இராணுவம் பிரதான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக மர நடுகை மூலம் இலங்கையில் சௌபாக்கியமான...
Ad Widget

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள்!

யாழில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன. இதேவேளை, புத்தாண்டு வாழ்த்துக்களை விடுதலைப்புலிகள் அமைப்பின் தேசியத்...

வழக்கு விசாரணைகளிலிருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விடுவிக்கப்பட்டார்!

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை , தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என அந்த ஆலயத்தின் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மன்றத்...

தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசியவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை!

யாழில் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்த போது அவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட காரணத்திற்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில்...

இரணைமடுச் சந்தியில் பாரவூர்தி விபத்து: சாரதி உயிரிழப்பு!

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். மாங்குளம் பகுதியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை யாழ் நோக்கிப் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. முன்னே சென்ற ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால்...

யாழில் 05 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்

யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (வயது 36) பிரதீபன் கஜநிதன் (11) பவநிதன் (வயது 9) அருள்நிதன் (வயது 8) இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா (வயது 2) ஆகியோரே காணாமல்...

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்; மூவர் வைத்தியசாலையில்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே மோதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில்...

துஷ்பிரயோக முயற்சி உட்பட பெண் வேட்பாளர்கள் பாதிக்கப்பட்ட 6 சம்பவங்கள் பதிவு

திறமையான பெண்களுக்கு தேர்தலில் களமிறங்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனவும், பலர் விகிதாசாரப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது என, பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை வேட்பாளர்களான பெண்களுக்கு எதிராக 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், வேட்பாளர்களான பெண்கள் பாதிப்புக்குள்ளான 06 சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெண்...

மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் :பொ.ஐங்கரநேசன்

பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாடும் அதன் கழுத்துப்பகுதியான ஆனையிறவுப்பகுதியில் கடல்நீர் புகுவதால் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இப்படி, ஓசோன்படையில் ஓட்டை, காடுகள் அழிப்பு, காலநிலையில் மாற்றம் என்று பல்வேறு சுற்றுச்சூழல்...

ஜனாதிபதி ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம்: சட்டமா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம் என சட்டமா அதிபர் தனது கருத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளார். எத்தனை ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கோரியிருந்த நிலையில் அது குறித்து ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது. பிரதம நீதியசர் பிரியசாத் டெப்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர் கைது

பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல்வீட்டு குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அயல்வீட்டு பெண்ணை வேட்பாளர் தாக்கியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்த...

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 125 நிலையான வீடுகள்

யுத்தத்தினால் பதிக்கப்பட்டு வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்காக, இவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதிக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், 125 நிலையான வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்தப் பகுதிகளுக்கான பிரதேச...

மாவிட்டபுரம் குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம்

அரசியல் கட்சி ஒன்று ஆலயத்தில் வழிபாடாற்ற அனுமதித்ததாகவும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகவும் கூறி மாவிட்டபுரம் ஆலய குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று (11) குருக்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த காங்கேசன்துறைப் பொலிசார் முயன்று வருவகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் ஆலயத்துக்கும்...

யாழில் துண்டிக்கப்பட்ட கேபில் தொடர்புகள்: பணம் கொடுத்த மக்களின் நிலை?

உரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபில் தொடர்புகள் சில, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்க நேற்று நீக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திய மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் அனைத்து கேபில் தொடர்புகளை வழங்கும் நிறுவனங்களும், தம்மை பதிவு செய்து கொள்ள...

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிக்கு 3 மாத சிறை

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்குத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது. குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் போன்ற இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு இத்...

புதிய வாகனங்களின் விற்பனை பாரிய வீழ்ச்சி!

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 320 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

மேலதிக வைத்திய நிபுணர்கள் இடமாற்றப்பட வேண்டும்: வடமாகாண சுகாதார அமைச்சர்

நாட்டில் சத்திர சிகிச்சைக் கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் போன்றோர் மேலதிகமாக கடமையில் உள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது...

தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது தொடர்பில் இந்தியாவில் கலந்துரையாடல்

இலங்கையில் தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு இலவச நூல்களை வழங்குதல் மற்றும் இலங்கை, இந்திய, மலேசிய கல்வி அமைச்சுக்களின் ஊடாக ஆசிரியர் பரிமாற்றங்களை செய்து ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய செயற்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இலங்கை கல்வி...

மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு அனுமதி!!

நாட்டிலுள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரியவித்துள்ளது. மது ஒழிப்பினை தனது தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதிகளை வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பியரிற்கு விலை குறைப்பினைச்...
Loading posts...

All posts loaded

No more posts