Ad Widget

யாழில் துண்டிக்கப்பட்ட கேபில் தொடர்புகள்: பணம் கொடுத்த மக்களின் நிலை?

உரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபில் தொடர்புகள் சில, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்க நேற்று நீக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திய மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் அனைத்து கேபில் தொடர்புகளை வழங்கும் நிறுவனங்களும், தம்மை பதிவு செய்து கொள்ள கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், இதனைச் செய்யத் தவறிய மூன்று நிறுவனங்கள் தமது சேவையை இரத்துச் செய்துள்ளமையால், எதிர்வரும் மாதத்திற்கு, அந்த சேவைகளைப் பெற பணம் அளித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக அவர்களது பணம் இதுவரை மீளளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

கேபில் தொடர்புகளை பெற்றுக் கொள்வதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் பலவற்றை பார்வையிட முடியும் என்பதால், யாழில் இந்த சேவை மிகவும் பிரபலம் அடைந்திருந்தது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் தயா மாஸ்டர் அண்மையில் தாக்கப்பட்டமையும், இந்த கேபில் தொடர்புகள் குறித்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே எனவும் கூறப்படுகின்றது.

Related Posts