Ad Widget

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் (ரூபா 6.9 பில்லியன்) அமெரிக்க டொலர் நிதியினை இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை புதுடில்லியில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா (David Rasquinha) மற்றும் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்எச்எஸ் சமரதுங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அரச உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் முழு வசிதிகளை கொண்ட கொண்ட வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் இந்த துறைமுகம் பிராந்தியத்தின் முக்கிய கடல் எல்லையின் கேந்திர நிலையமாக திகழும். மேலும் வடக்கில் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts