காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும்!!

நாடளாவிய ரீதியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்...

தூத்துகுடி படுகொலையை கண்டித்து யாழ்.இந்திய துணை தூதரகம் முன் போராட்டம்

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் தமிழகத்தின் தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள்ளது படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய...
Ad Widget

யமுனா ஏரியில் இளைஞனின் சடலம் மீட்பு

நல்லூர் யமுனா ஏரியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் கோவில் வீதியைச் சேர்ந்த மருதமுத்து கோவிந்தன் (வயது-27) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர். யமுனா ஏரியில் கடந்த 19ஆம் திகதி தவில் வித்துவானான முதியவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில்...

அரைச் சொகுசு பஸ்களுக்கு இந்த ஆண்டுடன் தடை

அரைச் சொகுசு பேருந்து சேவைகளுக்கு வழங்கப்படும் வழித்தட அனுமதிப் பத்திரம் இந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை அடுத்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம் – கொழும்பு, வவுனியா – கொழும்பு பேருந்து சேவையில் அரைச் சொகுசு பேருந்துகளே...

மக்களின் பணத்தை அநாவசியமாகச் செலவிடும் வலி.மேற்கு பிரதேச சபை!! – முதலமைச்சருக்கு அவசர மனு

“வலிகாமம் மேற்கு பிரதேச சபை, மக்களுக்கான அத்தியாவசிய அபிவிருத்திக்கான நிதி, ஆளணி என்பன பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், 40 லட்சம் ரூபா பணத்தில் மின்னுயர்த்தி அமைக்கும் அநாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளது” இவ்வாறு மக்களின் பணத்தை வீணாக்கும் பிரதேச சபையின் செயலை, அந்த பிரதேச சபை உறுப்பினரும் மாற்றுத்திறனாளியுமான சி. இதயகுமாரன் அம்பலப்படுத்தியுள்ளார். மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்படும்...

அச்சுவேலியில் படையினரால் காணி விடுவிப்பு

அச்சுவேலி பகுதியில் மிக நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களது காணியில் ஒரு பகுதி காணி நேற்று விடுவிக்கப்பட்டது. அச்சுவேலி இராச வீதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் 1.5 ஏக்கர் காணியே நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக மீள கையளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் அச்சுவேலி இராச வீதியில் பொது...

வட.மாகாண ஆளுநரால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளுக்கு மரக்கன்றுகளை வட.மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (வியாழக்கிழமை) வழங்கி வைத்தார். எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகளை யாழ். மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் றெஜினோல்ட்...

நினைவேந்தல் நிகழ்வில் மாலை மரியாதையை எதிர்பார்க்க கூடாது: முதலமைச்சர்

நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்றது. இங்கு மாலை மரியாதை அளித்து மேள தாளத்துடன் அழைத்து செல்வார்களென எதிர்ப்பார்க்க கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் 123 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போது எதிர்க்கட்சி...

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி, மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. கடந்த தசாப்த காலங்களில் இச்சட்டத்தினூடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை)...

5 ஆயிரம் பட்டதாரிகளுக்கே ஜூலையில் நியமனம்!

20 ஆயிரம் பட்டதாரிகளை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. “45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள்!! தாக்குதல் நடத்துவது கோழைத்தனம்! – சிவாஜிலிங்கம்

பத்திரிகையாளர்களின் எழுத்துக்களில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கோழைத்தனமாக தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கதென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் ஊடகவியலாளர்கள்...

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல அமைப்புக்கள் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியா விவசாயப் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் என்பவர் பதவியேற்று இரண்டரை வருடங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வவுனியாவில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர்...

திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் பதவியேற்பு!

திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் நேற்று (புதன்கிழமை) தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நிதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் அவரை வரவேற்றனர். தனது கடமையைப் பொறுப்பேற்ற நீதிபதி, நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பிலும், நீதிமன்றம் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியமை தொடர்பிலும் சில மணிநேரங்கள்...

சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டும் – தவராசா

வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்த சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகத் துறைக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்!!

காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுப்பட்டது . நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி...

விரைவில் பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக மாற்றம்!! -யாழில் பிரதமர்

விரைவாக பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைக்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வந்திருந்தார். இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார். இதேவேளை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பிரதமர் வடக்கின் முக்கிய...

பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் முதல்வர் தலையிலும் வெட்ட வேண்டுமாம்!!

வாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ...

இலங்கையில் உயிர்களை காவுகொள்ள காத்திருக்கும் புதிய வைரஸ்!

நாடு முழுவதும் பரவிவரும் இன்புளுவென்ஸா வைரஸ் நோய் தொற்றினால், இதுவரை அரச வைத்தியசாலைகளில் நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கியமாக தெற்கில் பரவும் குறித்த இன்புளுவென்ஸா நோய் தொடர்பில் மக்களுக்கு முறையான விளக்கமளித்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உயிர்ச்...

வடமராட்சியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழிற்கு வருகைதந்து வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பவர்களுக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் முறையிட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மருதங்கேணி பிதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளருடனான சந்திப்பில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

வடக்கின் முக்கிய அமைச்சருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு, இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் முகவரி மற்றும் யார் அனுப்பியவர்கள் என்ன விடயத்திற்கான விசாரணைகள் என குறிப்பிடாது விசாரணைக்கு வருமாறு சிறு துண்டில் எழுதிக்...
Loading posts...

All posts loaded

No more posts