20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

அரச சேவையில் 20,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளே, எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன...

இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பு?

எரிபொருள் விலையை அதிகரித்தமையினால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். முன்வைக்கப்பட்ட மூன்று வேண்டுகோள்களுக்கும், இதுவரையில் உரிய முறையில் பதில் கிடைக்காமையின் காரணமாகவே பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எரிபொருள் விநியோக தனியார் பவுசர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார் இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
Ad Widget

யாழ். பல்கலை சமூகம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரைலெட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழகப் பொலிஸாரின் வெறிச் செயலைக் கண்டித்தும் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதிவேண்டியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (28) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட்...

யாழில் ஐஸ்கிறீம் கடைக்குள் திடீரென நுளைந்த பிரதமர் ரணில் !!

யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீர் திடீர் என பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்களைக் காணும்போது அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். அதேபோல நேற்று இரவு திடீரென நல்லூர்ப் பகுதியிலுள்ள றீயோ ஐஸ்கிறீம் கடைக்கு சென்ற அவர் அங்கு ஐஸ்கிறீம் அருந்தியதேடு அங்கு ஐஸ்கிறீம் அருந்த வந்திருந்த...

வடக்கில் விஹாரைகள் அமைப்பதை விக்னேஸ்வரன் தடுக்க முடியாது: மைத்திரி

எந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடக்கில் விஹாரைகளை அமைக்கக் கூடாதென தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார். சுகாதார மற்றும் பொருளாதார செயத்திட்டங்களை முன்னெடுக்கும் நிரோதா எனும் செயத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு ஹற்றன் இலங்கை திறந்த பல்கலைக்கழக கிளைக் கேட்போர்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் விபத்து!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று இந்தியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து இந்தியாவின் கொச்சின் நோக்கிப் புறப்பட்ட யூஎல் 167 என்ற விமானமே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய போது, கொச்சின் விமான தளத்தினை அண்டிய பகுதியில் நிலவிய காலநிலை காரணமாக விமானம் வழுக்கிச் சென்று அருகில் இருந்த மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

கிரிக்கெட் வீரரின் தந்தையின் கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பிலான, முக்கிய தகவலொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதாவது அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவரது மார்பு பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில் கொலையாளிகளை கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக...

யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளரும் விநியோக முகாமையாளருமான செல்வராசா இராசேந்திரம் (56 வயது) என்பரே படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை யாழ்ப்பாணம் போதனா...

ஹற்றன் நஷனல் வங்கியின் தன்னிலை விளக்கம்!

ஹற்றன் நஷனல் வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய குற்றச்சாட்டிலேயே கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளருக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என வங்கி முகாமைத்துவத்தின் தகவல்கள் தெரிவித்தன. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் போரில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதொடர்பில் தென்னிலங்கையில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ஹற்றன் நஷனல் வங்கி உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியதை அடுத்து...

முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக்கொலை! – குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர். கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....

இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவலை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் சில்வா மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இரத்மலானை, ஞானானந்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில்...

நாட்டில் ஜனநாயக ஆட்சியா அல்லது இராணுவ ஆட்சியா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்!! – பிரதமர்

இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த பிரதமர், ”நாட்டில்...

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்

தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். குறிப்பாக இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள்...

பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். இன்று மற்றும் நாளை, எதிர்வரும்; 26ஆம் மற்றும் ஜூன் 02 ஆம் திகதி ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று...

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கண்டனத்தினை தெரிவித்து ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு... தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேந்தாந்தா ஸ்ரெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இப்போராட்டத்தின்...

தென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்

இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒரு வருடத்துக்கும் குறைவான வயதை உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழக்கும் 8 ஆவது குழந்தை இது எனவும் தென் மாகாண சுகாதார...

எச்சரிக்கை – யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் காற்றுடன் கூடிய மழை!!

தொடரும் சீரற்ற காலநிலையானது நாட்டின் பெரும்பாளான பகுதிகளிலும் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் இன்றும் (24) அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. மேலும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும் மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்...

வடக்கு – கிழக்கில் 50, 000 குடும்பங்களுக்கு கல் வீடு!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய நிலையான வீடுகளை அமைத்து வழங்குவதற்கான வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தக்காரர்களிடம் கேள்விமனு கோரப்பட்டது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விமனுக்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வீடமைப்பு வேலைத்திட்டம், ஐக்கியநாடுகள் சபையின் திட்டம் தொடர்பான அலுவலகம், இலங்கையில்...

தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட உறவுகளுக்கு வடமராட்சியில் அஞ்சலி

தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு வடமராட்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமராட்சி,பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தமிழக உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவினையும் தெரிவித்த ஈழத் தமிழ் உறவுகள், மக்களின் போராட்டத்தை பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தி...
Loading posts...

All posts loaded

No more posts