யாழ்ப்பாணத்திலிருந்து கண்ணீருடன் விடைபெறுகிறார் நீதிபதி இளஞ்செழியன்

“யாழ். மண்ணை நேசித்தேன். யாழ். மண்ணை சுவாசித்தேன். ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது. மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது” இவ்வாறு கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தினார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். “யாழ்ப்பாண...

இடியுடன் கூடிய மழையால் குடாநாடும் பாதிப்பு!

யாழ்.குடாநாட்டில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிற் கோபுரத்தின் ஜாலிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன. கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க கோபுர கலசங்களில் வரகு தானியம் இடப்படுகின்றன. எனினும் நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் சீரமைப்பு பணிகள் இடம்பெறுவதால்...
Ad Widget

இடமாற்றம் பெறும் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை மதிப்பளிப்பு

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று ( புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரச சட்டத்தரணிகளான நாகரட்னம் நிஷாந்த், திருமதி பிரிந்தா ரெஜிந்தன்...

விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பிரதி சபாநாயகர் பதவியை அங்கஜனுக்கு வழங்க கூட்டமைப்பு எதிர்ப்பு

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரிந்துரைத்துள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்....

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு – கரவெட்டில் சோகம்

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர். கேபிள் ரீவி வயருடன் மின்...

வடக்கு முழுவதும் சனி, ஞாயிறு தினங்களில் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – வவுனியா, மன்னார் மின்மார்க்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் இந்த தடை ஏற்படும் என இலங்கை...

தாவடியில் கைதாகிய ஆவா குழு உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கிய நபர் என்று கூறப்பட்டவரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. சந்தேகநபர் மீது இருவேறு வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கோப்பாய் பொலிஸாரும் மன்றில் சமர்ப்பணம் செய்தனர். கொக்குவில் முதலி கோவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்

நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக இன்று (23) இரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பலத்த...

பிரதி சபாநாயகராகிறார் அங்கஜன் ராமநாதன்!

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக...

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தது என்ன? – மௌனம் கலைத்தார் துளசி

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய யாழ். பல்கலைக் கழகத்திற்கு, ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கரும்புள்ளி ஏற்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படாத நிலையில் அங்கு தொடர்ந்தும் நிற்க விரும்பாமலேயே தான் வெளியேறியதாகவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் துளசி தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தின...

ஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்

நீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள்வெட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை...

மண்டைதீவு இராணுவ முகாமின் காணி உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளவும்: கஜதீபன்

மண்டைதீவில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு வட.மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்டைதீவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் ஒன்றை மேற்கொண்ட வட.மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் அப்பகுதியின் கிராமசேவகர் மற்றும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மண்டைதீவின் நன்னீர் வளமுள்ள பகுதியில்...

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர் துறைமுகம் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி பேரூந்துக் கட்டணங்கள் 12.5% வீதத்தினாலும், ஆரம்பக் கட்டணத்தினை 12 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை தனியார் பேருந்துகளில் புதிய...

தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்!

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தென் பகுதியை ஆட்டிப்படைக்கும் வைரஸ் தொற்று நாடு மூடுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தொற்றால் இதுவரை 600ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் முன் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்புளுவென்சா...

மின்னல் தாக்கத்தால் யாழில் பற்றி எரிந்த தென்னை

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்த நிலையில் யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் யாழ் நகரில் கடும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பாரிய வெளிச்சத்துடன் மின்னல் தாக்கியதில் தென்னை மரம்...

கிளிநொச்சியைச் சேர்ந்த தாயார் மகனுக்கு அரச வேலை கேட்டு யாழ்.தளபதிக்கு கடிதம்!!

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு தனது மகனை ஆள்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தாயார் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு யாழ். படைத் தலைமையகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் எழுதிய கடிதம்...

கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் சாதனை!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதத்தை பல்கலைக்கழக மாணவர்கள் சீராய்வது சிறந்தது. கறுப்பு உடையை போட்டுக் கொண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை” இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். “யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தலை இம்முறை தாங்கள் செய்யவேண்டும் எனக் கேட்டார்கள். சரி அடுத்த முறை...

விடுதலைப் புலிகளின் சொத்துக்களை கொடுப்பார்களா? சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை நாங்கள் எதற்காக கேட்கபோகிறோம்? கேட்டாலும் கொடுப்பார்களா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கை ஊடகங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளாமல், சிங்கள மக்கள் மத்தியில் எம்மை...

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

வடக்கு, கிழக்கு , இணைக்கப்பட வேண்டும், அவ்விணைப்புக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்களும் ஒத்துழைக்க வேண்டு என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,...
Loading posts...

All posts loaded

No more posts