- Monday
- May 11th, 2026
முல்லைத்தீவில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பிச்சென்ற நான்கு கைதிகளில் இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நால்வர் நேற்று முன்தினம்(செவ்வாய்கிழமை) மாலை 3 மணியளவில் நீதிமன்ற மலசலகூடத்தை உடைத்து தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு கைதிகளையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த...
தமிழகத்தின் முன்னாள் தலைவரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் மறைவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார். “தமது வாழ்வை தமிழர் வரலாற்றின் அத்தியங்களாக பதிவு செய்தவர் கலைஞர். இலங்கை தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களை கலைஞர் நடத்தியுள்ளார்” என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஈரானின் மீதான...
ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இச்சேவை இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வார அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை...
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், அரச...
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை 2018ஆம் ஆண்டுக்குள் முன்னெடுக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57...
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் நேற்று (7) செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உள்பட இளைஞர்களுக்கு மாவா போதைப்...
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு பிணை வழங்குவதா இல்லையா? என்ற கட்டளை வழங்குவதை மல்லாகம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது. அதனால் ஆசிரியரின் விளக்கமறியல் வரும் 14ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, அன்று பிணை விண்ணப்பம் மீதான...
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் கால்பந்தாட்ட கோல் கம்பம் சரிந்ததில் சிக்குண்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே உயிரிழந்தார். “தனியார் கல்வி நிலையத்திற்கு...
வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவர், க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர். தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பலின் அடாவடிகள் அதிகரித்திருந்தன. அதற்கு சாவகச்சேரி பொலிஸாரும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 10...
யாழ்ப்பாணம் சுழிபுரம், காட்டுப்புலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் வழக்குநேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சிறுமியின் உறவினரான பெண் ஒருவரும், றெஜினாவுடன் சம்பவ தினத்தன்று பாடசாலையில் இருந்து சேர்ந்து வந்த நண்பியிடமும் சாட்சியங்கள் பெறப்பட்டன. வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி சிறுமி றெஜினா கிணறு...
அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர். இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள்...
முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தப்பி ஓடியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 18 ஆம் திகதி செல்வபுரம் பகுதியில் இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சுன்னாகத்தை சேர்ந்த கொலைக் குற்றவாளி உட்பட 4 பேர், இவ்வாறு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் கடந்த...
புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில், நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “டயஸ்போரா என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. ஒவ்வொரு...
சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், சமஷ்டி சபை உறுப்பினரும், பொலிஸ் மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோனெடா சொமாருகா, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகளை ஆய்வு செய்யும்...
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது...
வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வினவியபோது அடுத்த...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்று வரும் அதிகார துஷ்பிரயோகங்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும், தர்மகர்த்தா சபையினரால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கோரியும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கல்லூரி பழைய மாணவர்களின் பிரித்தானிய கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி Northolt Village Community Centre, Ealing Road, Northolt UB5 6AD பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம்...
வலிகாமம் கிழக்கு பகுதியில் பாதீனிய ஒழிப்பு முயற்சிகளுக்காக பிரதேச சபையும், யாழ்ப்பாண பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இதன் முதல்கட்ட முயற்சியாக நேற்று(திங்கட்கிழமை) புத்தூர் நிலாவரை பகுதியில் அதிகளவான பாதீனிய செடிகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் அதிகளவான பொது இடங்களில் பாதீனிய செடியின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றது....
Loading posts...
All posts loaded
No more posts
