Ad Widget

சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி, சம்பந்தன் சந்திப்பு!

சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், சமஷ்டி சபை உறுப்பினரும், பொலிஸ் மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோனெடா சொமாருகா, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகளை ஆய்வு செய்யும் நோக்கில் அவரது விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts