- Monday
- May 11th, 2026
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நாளை(புதன்கிழமை) எதிர்கட்சித்தலைவர் மற்றும் அமைச்சர் மட்டத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சார்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரிதிநிதிகள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற்தொழிலினால் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்;படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு...
நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்துள்ளார். ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்த காலத்தில் 35 ஆயிரம்...
யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் புதிய வர்த்தக தொகுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் ஆயிரம் மில்லியன்...
யாழ் குடாநாட்டில் கடந்த 2 வாரங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று மட்டும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் கச்சேரியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே...
மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும்...
யாழ். பலாலி விமான நிலையத்தினூடாக இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டிற்குள் ஆரம்பிப்பிதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்காக முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து இந்திய விமான சேவைகளை...
சுயநல அரசியல்வாதிகளினாலேயே நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், ‘நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக...
யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படும் 334 பட்டதாரிகளில் பௌத்த பிக்கு ஒருவரும் தெரிவாகி உள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படுகிறது. பட்டதாரிகளுக்கான நியமனம் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள் என பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும் அந்தப் பட்டியல் தற்போது அகற்றப்பட்டுள்ளது....
பொலன்னறுவையில் சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபாதை வளாகத்தை அரச தலைவர் மைத்திரிபால திறந்து வைத்த பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு மைத்திரி பணித்த காணொலி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. பொலன்னறுவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உடற் பயிற்சி வளாகமொன்றை மைத்திரி திறந்துவைத்தார். இந்த...
வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 194 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் நாளை ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பி.ப. 3 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணக் கல்வி...
மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமான பணியின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) 47 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 440 பைகளில் பொதியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய அகழ்வு பணியின் போது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக எமது...
இலங்கை நகர் பகுதி ஒன்றில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வார்த்தைகளினால் மோதிக்கொள்ளும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாகனங்கள் நிறுத்த தடைசெய்யப்பட்டுள்ள பகுதியில் வாகனத்தை நிறுத்தியதால், அங்கு கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் சாரதிக்கு எதிராக அபராதம் விதித்துள்ளனர். இதன்காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாகனத்தில்...
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 29ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மானிப்பாய், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, ஆணைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே...
திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும...
இலங்கையில் இடம்பெறும் அனைத்து குற்றச்செயல்களின் பின்னணியிலும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுகிறாரா என சந்தேகிப்பதாக ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய, நல்லாட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய...
இனப்பிரச்சனைக்கு தீர்வினை காணப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணத்திற்குமான அலுவலகம் வடக்கில் முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் மற்றும் புதிய கடன் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இடைக்காலத் தடை விதித்துள்ளது. யாழ் மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது மாநகர சபை எல்லையில் வதிவிடம் கொண்டிருந்ததாக எதிர் மனுதாரரான யாழ்...
வவுனியா பகுதியில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் அத்தாய் குறிப்பிட்டுள்ளதாவது, “நேற்று (வியாழக்கிழமை) காலை தனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்று மாலை 1.30 மணியளவில் பாடசாலை முடிந்ததும் நண்பியின் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது பெரியார்குளம்...
யாழ்ப்பாணம்- அராலி மேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலிக்கு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனை குள்ள மனிதர்களே மேற்கொண்டிருப்பார்களென அப்பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டதுடன் அவரது தம்பியின் வீட்டு யன்னல்களும் தட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும்...
மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மிருசுவில் பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது – 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது – 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதிக்கு காரொன்றில் சென்ற குழுவினர், வாள்வெட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
