யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச நியமனத்தில் பிக்கு ஒருவரும் தெரிவு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படும் 334 பட்டதாரிகளில் பௌத்த பிக்கு ஒருவரும் தெரிவாகி உள்ளார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படுகிறது.

பட்டதாரிகளுக்கான நியமனம் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள் என பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும் அந்தப் பட்டியல் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

அந்தப் பெயர்ப் பட்டியலில் யாழ்ப்பாணம் நாக விகாரையைச் சேர்ந்த வண. கொங்கல சிறி தர்ம தேரர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நியமிக்கப்படுகிறார் என உள்ளது.

Related Posts