எம்மை அடக்கி ஆளும் பெரும்பான்மை சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: முதலமைச்சர்

எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...

இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதை எதிர்க்க வேண்டாம்: மனோ

இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதை எதிர்க்க வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இறக்குவானையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”வடக்கு கிழக்கிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், குறித்த மாகாணங்களுக்கு வெளியில் சென்று...
Ad Widget

நெடுங்கேணி மக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கும் அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயத்திற்கும் செல்லக்கூடாதென தொல்லியல் திணைக்களம் வழங்கியிருந்த உத்தரவை குறித்த திணைக்களம் நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ளது. இந்த அனுமதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கும் தாம் அனுமதிப்பதாகவும், ஆனால் ஆலய புனரமைப்பு நடவடிக்கைகள் செய்வதாயின் தமது அனுமதியைப் பெறவேண்டும் என குறித்த திணைக்கள...

ரயில் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

ரயில் ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று இயங்குமெனவும் அத்தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில் இயந்திர ஓட்டுநர்கள்...

தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. இப்பணிப்புறக்கணிப்பினை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பினை கடந்த...

குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய் என்கிறார் வடக்கு முதல்வர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிகாரி...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய சட்டம்!

முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35–70க்கும் இடைப்பட்டதாக காணப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சட்டம் 2081/44 ஆம் இலக்க விசேட வர்த்தமானி ஊடாக விலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுகொண்ட ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் ஓட்டும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாரதிகளுக்கான தகைமைகளை முழுமைப்படுத்தியவர்கள், வைத்திய பரிசோதனை அறிக்கை மற்றும்...

குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் : வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

யாழில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவினை முழுமையாக வழங்க வேண்டுமென வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ பொதுமக்களிடம் இன்று (சனிக்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த செயற்பாட்டுக்கு மக்களும் தங்களது முழு பங்களிப்பினை வழங்குவார்களாயின் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய உதவியாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுதலை

முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (10) மாலை அவர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இதன்போது ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் கடத்தல்!! – இளம் கணவன் மனைவி கைது!!

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றினர். இவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து காரில் கொழும்பு செட்டித் தெரு நோக்கிப் பயணிக்க இருந்த இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....

விபத்துக்கள் அற்ற மாகாணத்தை உருவாக்கும் திட்டம் – பா.டெனீஸ்வரன் சூளுரை

எமது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற ஒரு மாகாணமாக மாற்றவேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் எமது போக்குவரத்துச் சேவையினை பார்த்து ஏனைய மாகாணங்களும் பின்பற்ற வேண்டும் என்பது தனது இலட்சியங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். தனது அமைச்சினூடாக நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த...

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபடத்தடை: ஆனந்தன் எம். பி எதிர்ப்பு!

தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து சற்றுதொலைவில் அமைந்துள்ளது வெடுக்ககுநாரி மலை. குறித்த மலைப்பகுதியில் ஆதி...

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும் , சூப்பர் டீசல் லீற்றரின் விலை...

தமிழக மீனவர்கள் 27 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் தென்கிழக்கு கடற்பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்...

நாளையதினம் வடக்கில் வைத்திய சேவைகள் முடக்கம்?

யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு சேவையாற்றி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் தேவையான 18 வைத்தியர்களில் 9 வைத்தியர்கள் மட்டும் கடமையாற்றுகிறார்கள். அங்கு...

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கல் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார். இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2...

கடும் மழை பெய்வதற்கான சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும்...

முகமாலையில் வெடிப்புச் சம்பவம்! : மாணவனின் கை துண்டிப்பு!!!

முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பகுதியில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் மாணவன் ஒருவன் கையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பகுதிக்குள் வேலி அமைப்பதற்காக கட்டை தறிக்கச் சென்ற எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக...

வித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை)...

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பாணை!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த...
Loading posts...

All posts loaded

No more posts