Ad Widget

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய சட்டம்!

முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35–70க்கும் இடைப்பட்டதாக காணப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சட்டம் 2081/44 ஆம் இலக்க விசேட வர்த்தமானி ஊடாக விலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுகொண்ட ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் ஓட்டும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சாரதிகளுக்கான தகைமைகளை முழுமைப்படுத்தியவர்கள், வைத்திய பரிசோதனை அறிக்கை மற்றும் குற்றவாளியாக இல்லையென்ற பொலிஸ் அறிக்கை ஆகியவற்றை போக்குவரத்து ஆணையாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படுமென அவ்வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்படுள்ளது.

Related Posts