- Monday
- May 11th, 2026
சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான குருதி சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சருடன், பிரதி சுகாதார அமைச்சர்,...
வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போதைய அரசால் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மக்களின் முழு ஒத்துழைப்புடேனேயே நாம் ஆட்சியை...
ஓர் அரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமையினால், நாம் இன்று நீதிமன்றில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். அத்துடன், போர்க்காலத்தில் மஹிந்த அரசு செயற்பட்டதைப் போலவே, இந்த நல்லாட்சி அரசும் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு...
முல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, ஒருசில தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்போது, சுனில் நிஷாந்த என்ற தனிநபருக்கு சொந்தமான பல மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து...
யாழ். மாவட்டத்தில் காணப்படும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் முன்வர வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை கிளை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று (வியாழக்கிழமை)...
யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்து விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் விக்டோறியா வீதியில் அமைந்துள்ள வெளிமாவட்டத்தவர்களுக்கான விடுதியிலேயே நேற்று (வியாழக்கிழமை) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் குறித்த விடுதியில் தங்கியபோது,...
இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்துள்ளது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு இம்மாதத்திற்குள் நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்படின், மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் ஊடங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது...
அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய விற்பனை கிளை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் புதிய விற்பனை கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர், வைத்தியசாலையின் நோயாளர் விடுதி போன்றவற்றை...
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பிரியதர்சினி புஷ்பராஜா (வயது -46) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது கணவர் மருத்துவர்....
இராணுவ கனரக வாகனம் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து இரணமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரை அதே திசையில் பயணித்த இராணுவ வாகனம்...
வடக்கு மாகாணத்தில் கூட்டுறவை விரிவாக்கும் வேலைத்திட்டம் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கூட்டுறவு அமைப்புகள் புதிதாக இணைத்துள்ளன. இந்த ஆண்டுக்கான கூட்டுறவின் நாற்பது வேலைத்திட்டங்களில் புதிதாக அங்கத்தவர்களைச் சங்கங்களில் இணைக்கும் பணிகள் பெரிதும் வெற்றியளித்துள்ளன என்று வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். அநேகமான கூட்டுறவுச் சங்கங்கள் இந்த அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தில்...
யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருட்கள் பாவனை, வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், யாழில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் சில குழுக்களின் இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இன்று காலை கொடியேற்ற பெருவிழா இடம்பெறவுள்ளது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...
மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலட்சக் கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக் கொண்டார். இதன்போது, மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால்...
யாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழக்கத்திற்கு மாறாக திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ததில் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மாலை 6 மணியளவில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் மழைப் பொழிவும் கனமாக காணப்பட்டுள்ளது. காரைநகர்...
வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலரின் அலுவலகத்துக்கு அருகே இன்று காலை 10 மணியளவில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டனர். “பெண்ணையும் அவரது 5 வயதுடைய மகனையும் காணவில்லை என அயலவர்கள் தேடிய சமயத்தில் அவர்கள் கிணற்றில் சடலமாக காணப்பட்டனர். 33 வயதுடைய தாயும் 5 வயதுடைய சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது உயிரிழப்பில்...
இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர...
ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில்...
நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டமாக காணப்படக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மத்திய மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
