Ad Widget

யாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்!

யாழ். மாவட்டத்தில் காணப்படும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் முன்வர வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை கிளை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார். தொடர்ந்தும் அவர் மேலும் கூறுகையில்,

“போரினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் எமது மருத்துவமனைகளில் மிகவும் குறைவாக இருக்கின்றார்கள்.

அந்தவகையில் எமது பிரதேசத்தில் பல துறைகளை சார்ந்த மருத்துவர்கள் அவசியம் என்ற நிலையில், மருத்துவர்கள் தாதியர்கள் பற்றாக்குறை தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்” என மாவை சேனாதிராஜா இதன் போது கேட்டுக்கொண்டார்.

Related Posts