- Tuesday
- May 5th, 2026
வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் (சுகாதாரக் கிராமம்) காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன்...
வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்து. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிலர் மர்ம பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த...
நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத துறைசார் பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிமுதல் 24 மணி நேரத்திற்கு முன்னெடுக்கப்படும் என...
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் தமது பரீட்சைகளை நிறுத்துமாறு கோரி வவுனியா வளாக நிர்வாக கட்டடத்தொகுதியை முற்றுகையிட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் அனைத்து பீடங்களுக்கும் தற்போது பரீட்சை இடம்பெற்று வருகின்றது. எனினும் வாளகத்தின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சுமார் 70 பேர் வரையில் காச்சல் மற்றும் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று...
நெடுங்கேணி- பட்டிகுடியிருப்பு பகுதியில் தன் இரு பிள்ளைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் கிணற்றில் குதிக்க முயற்சித்தபோது அயலவா்களால் தாய் காப்பாற்றப் பட்டுள்ளபோதும் இரு குழந்தைகளும் உயிாிழந்துள்ளனா். அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச்சேர்ந்த அமரர் உதயன் என்பவருடைய மனைவி தனது நான்கு வயது பெண்பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும்...
யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள கடற்கரையோரக் கிராமமாக குருநகர் இருந்து வருகிறது. சுற்றுச் சூழலும், சுகாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகவுள்ள பகுதிகளையும், குருநகர் கடற்பகுதியை சூழவுள்ள அழகான பகுதிகளையும் புகைப்படங்களாக எடுத்துக் காட்சிப்படுத்தி உள்ளார் தர்மபாலன் ரிலக்சன். யாழ். குருநகர் மீன்சந்தையில் இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை குருநகரை...
வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் இறைமை மக்களுக்குரியது. அதாவது இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. அந்த இறைமை அதிகாரத்தை உதாசீனப்படுத்த முடியாது, மக்களே அதனை அனுபவித்தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறைமையை அனுபவிப்பதற்கான ஓர் அணுகுமுறையாக வாக்குரிமை கூறப்பட்டுள்ளது. எனவே வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும் என...
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எமது கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை 28.10.2019 காலை 10.35 மணியளவில் இல. 200 ஹொரவபொத்தான வீதிரூபவ் வவுனியாவில் அமைந்துள்ள றோயல் கார்டன் ஹோட்டலில் உபதலைவர் திரு. கா. குலசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா, திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த...
அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று உரிமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் சிறுப்பிட்டியில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்றது. ,”பேருந்தின் உரிமையாளர் சாரதி, நடத்துனர் என சிலருக்கு தீபாவளியை முன்னிட்டு தீபாவளி தினத்தன்று இரவு மது விருந்து வைத்துள்ளார். விருந்தின் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் பேருந்தின்...
வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த...
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் தாக்கம்...
திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 82 மணிநேர மீட்புப்பணிக்கு பின், குழந்தை சுஜித்தின் உடல் செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது...
பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோட்டபய ராஐபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவரான மகிந்த ராஐபக்ஷ உள்ளிட்ட பலரும் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் யாழ் சங்கிலியன் பூங்கா...
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மேலும் அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும்கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையை ஆரம்பித்த...
உலகின் ஆபத்தான மனிதராக கருதப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி நேற்று (27) விடியற்காலை அமெரிக்காவின் சிறப்பு படையின் நடவடிக்கையில் கொல்லப்பட்டிருந்தார். பக்தாதி கொல்லப்பட்டது, ஐ.எஸ் அமைப்பை மனதளவிலும், செயற்பாட்டளவிலும் நிச்சயம் முடக்கும். நீண்டநாள் அடிப்படையில் அந்த அமைப்பு இல்லாமல் போகும் வாய்ப்பையும் பக்தாதியின் மரணம் ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த பக்தாதி?...
பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்சவுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் பிரச்சார நடவடிக்கைக்காக இன்று மதியம் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவும் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனா். இதற்காக யாழ்.நகாில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கட மையில் ஈடுபட்டிருப்பதுடன், பொலிஸாரும்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது....
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்) தற்போது...
வட மாகாண மருத்துவ மன்றத்திற்க்கான புதிய நிர்வாக குழு கடந்த சனிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது. நிர்வாகக் குழுவில் தலைவராக தலைவர் - Dr.P.அச்சுதன் உம் செயலாளராக Dr.G.றஜீவ் உம் பொருளாளராக Dr.s. உமாசுதன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
Loading posts...
All posts loaded
No more posts
