பிரதேசசபை உறுப்பினர்களுக்கு காவல்துறை உத்தியோகஸ்தர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு!!

வலி.வடக்கு பிரதேச சபை சபா மண்டபத்திற்குள் நுழைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உறுப்பினர்களுக்கு தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வலி.வடக்கு பிரதேச சபையின் 19ஆவது கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட போது உறுப்பினர்கள் சிலர் கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட...

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னரே அடுத்த முடிவு – மாவை சேனாதிராஜா

பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகளில் உறுதியாக முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை அவதானித்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும்...
Ad Widget

திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்!!- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை!!

இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது...

இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் (குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின்...

வடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்

வடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் என புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் திங்கட்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட்...

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒருவாரத்துக்கு நீடிக்கும்

அண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பெரும்பாலான திரவ...

Climathon Jaffna நிகழ்வின் ஊடக அறிக்கை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019” ஒக்டோபர் 24, 25 ,26 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத், மும்பை போன்ற பெருநகரங்களின் வரிசையில் யாழ்ப்பாணமும் கிளைமத்தோனில் இணைகிறது. இலங்கையில் இருந்து...

யாழ் சென்னை விமான சேவைக் கட்டணம் தொடர்பில் பேச்சுவார்த்தை!!

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்களுக்கும் இலங்கைத் தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் முற்பகுதியில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்கள் சிவில்...

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்களமொழிமூல முன்பள்ளி!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது. சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் இந்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் இந்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வோதயத்தின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில் மும்மொழிக் கல்விக்காக...

யாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மாநகர சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசினார் வடக்கு ஆளுநர்!

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசியுள்ளார். வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது....

யாழில் கொலை செய்த குற்றத்துக்காக இருவருக்கு தூக்குத் தண்டனை!!

யாழ்ப்பாணம் காரைநகரில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு இருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி காரைநகர் பாலாவோடையில் முருகேசு கணேசன் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்தது. அவரது கொலையடுத்து...

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செயயக்கோரி யாழில் போராட்டம்!!

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை, இலங்கைக்கு வருகைதர வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.கல்வியங்காட்டிலுள்ள காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ‘ஐ.நா.அமைதிப்படை வர வேண்டும்’, ‘காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று’, ‘கோட்டாபயவை கைது...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளை அவமதித்த இலங்கை விமானபடை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்....

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!!

யாழ்ப்பாண காவற்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகொலையான யாழ்.பல்கலை கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன்...

யாழ். இந்துவுக்கு அமெரிக்க விஞ்ஞானி வருகை!!

அமெரிக்க விஞ்ஞானியும், அமெரிக்க இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சிவலிங்கம் சிவானந்தன் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகை தந்தார். கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் அவரை வரவேற்பளித்தார். விஞ்ஞானி பாடசாலை மாணவர்களையும் சந்தித்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது அமெரிக்காவின் விஞ்ஞானியுமான சிவானந்தனுக்கு பாடசாலை மாணவர்களினால்...

தனிமையில் வசித்த வயோதிபப் பெண் சித்திரவதையின் பின்கொலை!

கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது. கொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் வயோதிபப் பெண்ணை இழுத்து வந்து உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தணல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளான்...

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை – சுமந்திரன்

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தாம் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை எனவும் அவர்...

ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப்...

இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும்...
Loading posts...

All posts loaded

No more posts