Ad Widget

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடக அறிக்கை!!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எமது கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று
திங்கட்கிழமை 28.10.2019 காலை 10.35 மணியளவில் இல. 200 ஹொரவபொத்தான வீதிரூபவ் வவுனியாவில் அமைந்துள்ள றோயல் கார்டன் ஹோட்டலில் உபதலைவர் திரு. கா. குலசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா, திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், இதற்காக போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைச் சந்திக்க 4 பேர் கொண்ட குழுவையும் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தது.

அம்பாறையிலிருந்து புறப்பட்ட பிரதிநிதிகள் அங்கு நிலவிய பதற்றத்தால் ஏற்பட்ட சுற்றிவளைப்பால் கலந்துகொள்ள முடியாதென அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. இந்தியாவின் அரசியல் சாசனத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த
அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தென்ஆபிரிக்க அரசியல் சாசனத்திலுள்ள உரிமைகள் சட்டத்தையும் (Bill of Rights) இணைத்துக் கொள்ள வேண்டும்.

2. தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பொது மன்னிப்புடன் விடுதலை
செய்யப்பட வேண்டும்.

3. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மைத் தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்க முன் இருந்த ராணுவ முகாம்களை தவிர்த்து ஏனைய அனைத்து
முகாம்களும் மூடப்பட வேண்டும்.
5. இன – மத குரோதங்களை தூண்டும் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் கடும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்.
6. வடக்கு கிழக்கில் புதிதாகத் திட்டமிட்டு நடைபெறும் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த சிங்கள மயமாக்கல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
7. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும்ரூபவ் போராளிகளுக்கும்
இதுவரை எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படாதுள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் மீள இயல்பு
வாழ்க்கைக்குத் திரும்ப வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. வடக்கு கிழக்கில் வேலை வாய்ப்புக்களில் நியமனங்களை அந்தந்த மாகாணங்களில் உள்ளவர்களுக்கு
முன்னுரிமை வழங்கத் தவறும் அதிகாரிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி – நியாயமான நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டும்.
9. காலத்துக்குக் காலம் இயற்கை அனர்த்தங்களினாலும்ரூபவ் வேறு வகையிலும் பாதிக்கப்படுவோருக்கு உடனடி
நிவாரணங்கள் வழங்க வேண்டும்.
10. தமிழீழ வைப்பகத்தில் அடகுவைக்கப்பட்ட மற்றும் கடனாக வழங்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதி
கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சியோருக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11. நாடு பூராவும் குறைந்த வருமானமுடையவர்களுக்கு 1970க்கு முன்பிருந்ததுபோல இலவசமாக அல்லது
குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை (கூப்பன் அடிப்படையில்) மீண்டும் வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம் – தமிழர் விடுதலைக் கூட்டணி

Related Posts