Ad Widget

வாக்குரிமையை உதாசீனப்படுத்தாதீர்கள்!!

வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மக்களின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யது. அதா­வது இந்த நாடு மக்­க­ளுக்கு சொந்­த­மா­னது. அந்த இறைமை அதி­கா­ரத்தை உதா­சீ­னப்­ப­டுத்த முடி­யாது, மக்­களே அதனை அனு­ப­வித்­தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறை­மையை அனுபவிப்ப­தற்­கான ஓர் அணு­கு­மு­றை­யாக வாக்­கு­ரிமை கூறப்­பட்­டுள்­ளது. எனவே வாக்­கு­ரிமை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும் என முன்னாள் தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் தெரி­வித்தார்.

எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்­கையில் எட்­டா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. இத் தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் சார்­பிலும், சுயேட்சை குழுக்­களின் சார்­பிலும் மொத்தம் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்­றார்கள்.

இந் நிலையில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வாக்குச் சீட்டு தொடர்­பா­கவும் வாக்­க­ளிப்­பது குறித்தும், ஜனா­தி­பதி எவ்­வாறு தெரி­வு­செய்­யப்­ப­டுவார் என்­பது தொடர்­பிலும் பல கேள்­விகள் வாக்­கா­ளர்கள் மத்­தியில் புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.

இது தொடர்­பான ஒரு பரந்­து­பட்ட விளக்­கத்தை பெற்றுக் கொள்­வ­தற்­காக முன்னாள் தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் எம்.எம்.மொஹ­மட்­டிடம் ஒரு நேர்­கா­ணலை மேற்­கொண்­டி­ருந்தோம்.

அந்த நேர்­கா­ணலின் முழு விபரம் பின்­வ­ரு­மாறு,

கேள்வி : இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் மொத்தம் எத்­தனை வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர்?

பதில் : இம் முறை ஜனா­தி­பதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்­சத்து 92 ஆயி­ரத்து 96 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர்.

கேள்வி : நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லா­னது எத்­த­னையாம் ஆண்டு வாக்­காளர் இடாப்­பின்­படி இடம்­பெ­று­கி­றது?

பதில் : 2018 ஆம் ஆண்டின் வாக்­காளர் இடாப்­பின்­படி தேர்தல் இடம்­பெ­று­கி­றது.

கேள்வி : உத்­தி­யோ­க­பூர்­வமாக வாக்­கா­ளர்கள் அட்­டைகள் விநி­யோ­கிக்­கப்­பட்ட காலம் முடி­வ­டைந்த பின்­னரும், வாக்காளர் அட்டைகள் கிடைக்­கா­த­வர்கள் தேர்­தலில் வாக்­க­ளிக்க முடி­யுமா. அவ்­வாறு எனில் அவர்கள் முன்­னெ­டுக்க வேண்­டிய நட­வ­டிக்கை என்ன?

பதில் : உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டைகள் ஒவ்­வொரு வாக்­கா­ளர்­க­ளுக்கும் வாக்­க­ளிப்பு தினத்­துக்கு ஆகக் குறைந்­தது ஒரு வாரத்­துக்கு முன்­ன­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் ஒவ்­வொ­ரு­வ­ருடைய வீட்­டுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்­கப்­படும். ஆனால் தபால் மூலம் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்ற வாக்­காளர் அட்­டை­களை பகிர்­வ­தற்­காக தபால் ஊழி­யர்கள் செல்­கின்­ற­போது வீடுகள் மூடப்­பட்ட நிலையில் இருந்தால், அந்த வாக்­காளர் அட்­டைகள் குறித்த தபால் விநி­யோ­கிக்­கின்ற அல்­லது பகிர்ந்­த­ளிக்­கின்ற தபால் அலு­வ­ல­கத்தில் வைத்­தி­ருக்­கப்­படும்.

எந்­த­வொரு வாக்­கா­ள­ருக்கும் வாக்­க­ளிப்பு தினத்­தன்றோ அல்­லது அதற்கு முன்போ குறித்த தபால் அலு­வ­ல­கத்­திற்கு சென்று தமது ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி உரிய வாக்­காளர் அட்­டை‍யை பெற்றுக் கொள்ள முடியும். எவ்­வா­றெ­னினும் இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டை­களை வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்கு கட்­டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிபந்­தனை கிடை­யாது.

கேள்வி : தேர்­தலில் வாக்­க­ளிக்கும் ஒரு வாக்­கா­ளரும் எவ்­வா­றான ஆயத்­தங்­க­ளுடன் வாக்­க­ளிக்கும் நிலை­யங்­க­ளுக்கு செல்ல வேண்டும்?

பதில் : கட்­ட­ாய­மாக உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டைகள் இருந்­தாலும் அத­னு­டனும், தனது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான செல்­லு­ப­டி­யான ஆள் அடை­யாள அட்­டை­யுடன் செல்ல வேண்டும். அதா­வது தேசிய ஆள் அடை­யாள அட்டை, செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு, செல்­லு­ப­டி­யான சாரதி அனு­மதிப் பத்­திரம், முதியோர் அடை­யாள அட்டை மற்றும் ஓய்வு பெற்ற அர­சாங்க அலு­வலர் ஒரு­வ­ராயின் ஓய்வு பெற்ற அர­சாங்க அலு­வலர் அடை­யாள அட்டை போன்ற அடை­யாள அட்­டை­க­ளுடன் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு செல்ல வேண்டும்.

இதே­வேளை இந்த அடை­யாள அட்­டைகள் எதுவும் இல்­லா­த­வர்கள் தேர்தல் ஆணைக்­கு­ழு­வி­ட­மி­ருந்து தற்­கா­லிக அடை­யாள அட்­டையை பெற்றுக் கொள்ள முடியும். அதா­வது கிராம அலு­வ­ல­ருக்கு இரண்டு புகைப்­ப­டங்­களை வழங்கி இதனை பெற்றுக் கொண்டு, அதன் மூலம் தேர்­தலில் தனது வாக்­கினை அளிக்­கலாம்.

இவ்­வா­றான ஆள் அடை­யாள அட்­டை­களில் ஏதேனும் ஒன்­றுடன் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு செல்ல வேண்டும். இவை எதுவும் இல்­லா­விடின் எந்­த­வொரு வாக்­கா­ள­ருக்கும் தேர்­தலில் வாக்­க­ளிக்க முடி­யாது.

கேள்வி : வாக்­க­ளிக்­கும்­போது ஒரு­வ­ரு­டைய வாக்­கினை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பிறி­தொ­ருவர் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­யி­ருந்தால், பாதிக்­கப்­பட்ட வாக்­கா­ள­ருக்­கான தீர்வு என்ன?

பதில் : குறித்த நடை­மு­றை­யா­னது இலங்­கையில் கடந்த 2004 ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஆள் அடை­யாள அட்டை கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டாத காலத்தில் இருந்­தது. ஆனால் தற்­போது அது மிகவும் அருவி விட்­டது. ஏனெனில் ஆள் அடை­யாள அட்டை ஆவ­ணத்­துடன் ஒப்­பிட்டே வாக்­காளர் அட்­டைகள் வழங்­கப்­ப­டு­கின்­றது. எனவே தற்­போது இலங்­கையில் ஆள் மாறாட்ட வாக்­க­ளிப்­பா­னது பூஜ்­ஜிய நிலையில் உள்­ளது.

எனினும் வாக்­காளர் ஒரு­வ­ரது வாக்­கினை பிறி­தொ­ருவர் அளித்­தி­ருந்தால், பாதிக்­கப்­பட்ட வாக்­காளர் குறித்த வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் உள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வ­ல­க­ரிடம் தனக்கு வாக்குச் சீட்டு வேண்டும் எனக் கோரி, ‘கேட்டுப் பெறும் வாக்குச் சீட்டு’ என்ற வாக்குச் சீட்டை பெற்று வாக்­க­ளிக்க முடியும்.

அதே­நேரம் பாதிக்­கப்­பட்ட நபர் தன்­னு­டைய வாக்­கினை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­திய நப­ருக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும்.

கேள்வி : ஒரு வாக்­கி­னது முக்­கி­யத்­துவம் பற்றிக் கூற முடி­யுமா?

பதில் : வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மக்­களின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யது. அதா­வது இந்த நாடு மக்­க­ளுக்கு சொந்­த­மா­னது. அந்த இறைமை அதி­கா­ரத்தை உதா­சீ­னப்­ப­டுத்த முடி­யாது, மக்­களே அதனை அனு­ப­வித்­தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறை­மையை அனு­ப­விப்­ப­தற்­கான ஓர் அணு­கு­மு­றை­யாக வாக்­கு­ரிமை கூறப்­பட்­டுள்­ளது. எனவே வாக்­கு­ரிமை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும்.

கேள்வி: இம்­முறை ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வாக்­க­ளிக்கும் முறை­மை­யையும் வாக்குச் சீட்டின் வடி­வ­மைப்­பி­னையும் பற்றி விளக்க முடி­யுமா?

பதில் : மிகப்­பெ­ரிய அளவில் வாக்குச் சீட்டில் வித்­தி­யாசம் இல்லை. வாக்குச் சீட்டில் முத­லா­வது நிரலில் போட்­டியி­டு­கின்ற 35 வேட்­பா­ளர்­க­ளி­னதும் பெயர், சிங்­கள அக­ர­வ­ரி­சை­யின்­படி அமையப் பெற்­றி­ருக்கும். அதனைத் தொடர்ந்து ஒவ்­வொரு வேட்­பா­ளர்­களின் பெய­ருக்கு எதிரே அவர்­க­ளது தேர்தல் சின்னம் இருக்கும். அதற்கு அடுத்த நிரலில் வெற்றுக் கூடு இருக்கும். அந்த வெற்றுக் கூட்டில் வாக்­கி­னையோ அல்­லது விருப்­பி­னையோ அளிக்க முடியும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் முறைமை ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டையில் வேறு­பட்­ட­தாக அமையும். இலங்­கையில் இருக்­கின்ற ஜனா­தி­பதி முறை­மையில் வாக்­கையும் அளித்து, விருப்­பையும் வழங்க அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இரண்­டுக்கு மேற்­பட்ட வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்டால் மாத்­திரம் இவ்­வாறு வாக்­கோடு, விருப்பு வாக்­கினை அளிக்­கலாம்.

மூன்று பேர் போட்­டி­யிட்டால், அப்­பொழுது வாக்­காளார் ஒரு­வ­ருக்கு ஒரு வாக்­கி­னையும், இரண்­டா­வது விருப்­பொன்­றையும் அடை­யாளம் இட முடியும். எனினும் மூன்­றுக்கு மேற்­பட்­ட­வர்கள் போட்­டி­யிட்டால், ஒரு­வ­ருக்கு வாக்­கி­னையும், தான் விரும்­பினால் மற்­றைய இரு­வ­ருக்கும் இரண்டு விருப்­புக்­க­ளையும் வழங்க முடியும். மற்­றைய இரு விருப்­புக்­களும் 2,3 என்று அடை­யாளம் இட வேண்டும்.

அதுபோல் ஒரு வாக்­காளர் தனது வாக்கை அளிக்­கின்­ற­போதும், ஏற்றுக் கொள்­ளப்­பட்ட வாக்­க­ளிக்கும் முறை­யாக இலக்­கத்தை குறிப்­பி­டு­வ­தையே கரு­தப்­படும். குறிப்­பிட்ட வெற்றுக் கூட்டில் 1 என இலக்­கத்தை குறிப்­பிட வேண்டும். இரண்டு பேர் போட்­டி­யி­டு­கின்­ற­போ­திலும் 1 என்று அடை­யா­ள­மி­டு­வது சரி­யா­ன­தாகும்.

எனினும் ஒன்றுக்கு பதி­லாக புள்­ளடி இடலாம். ஒருவர் புள்­ள­டி­யையும் ஒன்று என்ற இலக்­கத்­தையும் ஒரே வாக்குச் சீட்டில் குறிப்­பிட்­டி­ருந்தால் அது பிரச்­சி­னைக்­குரி­ய­தாகும். காரணம் இதில் எது வாக்கு எது விருப்பு வாக்கு என்­பது கேள்­வியை ஏற்­ப­டுத்தும். ஏனைய தேர்­தல்­களில் புள்­ள­டி­யி­டு­வது ஏற்றுக் கொள்­ளப்­பட்ட முறை­யாகும். ஆனால் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு எண்ணை அடை­யாளம் இடு­வதே முறை­யாகும். ஒரு வாக்குச் சீட்டில் ஒன்­றுக்கு மேற்­பட்ட புள்­ள­டி­களை இட்­டி­ருந்தால் அது செல்­லு­ப­டி­யற்ற வாக்­காக கரு­தப்­படும்.

கேள்வி : தபால் மூல வாக்­க­ளிப்­பினை பற்றி தெளி­வு­ப­டுத்­துங்கள்?

பதில் : இம் முறை தபால்­மூலம் வாக்­க­ளிப்­ப­தற்கு 6 இலட்­சத்து 59 ஆயிரம் பேர் தகு­தி­பெற்­றுள்­ளனர் என்று நினைக்­கின்றேன். ஏற்­க­னவே கடந்த 18 ஆம் திகதி தபால்­மூல வாக்­கா­ளர்­களின் விப­ரங்­களை உரிய இடங்­க­ளுக்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு அனுப்பி வைத்­துள்­ளது.

எதிர்­வரும் 30 மற்றும் முதலாம் திக­தி­களில் தபால்­மூல வாக்­குப்­ப­தி­வுகள் இடம்­பெ­ற­வுள்­ள­நி­லையில், தபால்­மூல வாக்­குப்­ப­திவு இடம்­பெறும் வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் ஒவ்­வொரு வேட்­பா­ளர்­களின் முக­வர்­களும் சென்று வாக்­குப்­ப­தி­வினை கண்­கா­ணிக்­கலாம்.

அதே­வேளை, தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவும் மேற்­பார்­வை­யா­ளர்­களை அனுப்பி அங்கு இடம்­பெறும் வாக்­குப்­ப­தி­வினை அவ­தா­னிப்­பார்கள். அதன்­பின்னர் வாக்­குச்­சீட்­டுகள் பொதி­யி­டப்­பட்டு தெரி­வத்­தாட்சி அலு­வ­ல­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும்.

கேள்வி : அளிக்­கப்­பட்ட மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­கு­களின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி எவ்­வாறு தெரி­வு­செய்­யப்­ப­டுவார்?

பதில் : அளிக்­கப்­பட்ட மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­கு­களில் 50 சத­வீ­தத்­தையும், ஆகக் குறைந்­தது மேலும் ஒரு வாக்­கினை ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் பெற்றால், அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­ப­டுவார்.

கேள்வி : எந்­த­வொரு வேட்­பா­ளரும் 50 சத­வீ­தத்­துக்கும் மேல் வாக்­கு­களை பெறா­விடின் ஜனா­தி­பதி எவ்­வாறு தெரி­வு­செய்­யப்­ப­டுவார்?

பதில் : அத்­த­கைய ஒரு சந்­தர்ப்பம் ஏற்­ப­டாமல் போனால் நாடு முழு­வதும் அதி­கூ­டிய வாக்­குகளை பெற்ற இரு வேட்­பா­ளர்­களும் போட்­டியில் தொடர்ந்து இருக்­கின்ற வேட்­பா­ளர்­க­ளா­கவும், ஏனைய 3 தொடக்கம் 35 ஆம் இடம்­ வ­ரை­யுள்ள வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட வேட்­பா­ளர்­க­ளா­கவும் தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் பெய­ரி­டப்­ப­டு­வார்கள்.

அதன் பின்னர் போட்­டி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட 33 வேட்­பா­ளர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற வாக்குச் சீட்­டுக்­களில் 2,3 ஆம் விருப்­புக்கள் முன்­ன­ணியில் உள்ள இரண்டு வேட்­பா­ளர்­களில் யாரா­வது ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா என கணிப்­பிட்டு பார்ப்­பார்கள். இரண்டாம் கட்ட வாக்­கெண்ணல் நட­வ­டிக்­கை­யா­னது முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் இந்த நடை­முறை பின்­பற்­றப்­படும்.

அதன் பின்னர் இலங்கை முழு­வ­தி­லு­மி­ருந்து வரும் குறித்த 33 வேட்­பா­ளர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்ட வாக்­கு­களில் 2 அல்­லது 3 ஆம் விருப்­புக்கள் முன்­ன­ணியில் உள்ள இரண்டு வேட்­பா­ளர்­களில் யாருக்­கா­வது வழங்­கப்­பட்­டி­ருந்தால் அந்த வாக்­கு­களின் எண்­ணிக்­கையும், ஏற்­க­னவே அவர்கள் பெற்­றி­ருந்த வாக்­குளின் எண்­ணிக்­கையும் கூட்­டப்­ப­டு­கின்­ற­போது, அதி­கூ­டு­த­லான வாக்­கு­களை பெற்­றவர் ஜனா­தி­ப­தி­யாக தேர்­வு­செய்­யப்­ப­டுவார்.

கேள்வி : விருப்பு வாக்கின் அவ­சி­யத்தை பற்றி கூற முடியுமா?

பதில் : விருப்பு வாக்கு என்பது கட்டாயம் அல்ல. ஒருவர் விரும்பினால் வாக்கினை அளித்து விட்டு, அதற்கு மேலதிகமாக 2 என்ற இலக்கத்தினூடாக இன்னொருவருக்கு இரண்டாம் விருப்பினையும், 3 என்ற இலக்கத்தினூடாக மற்றொருவருக்கு மூன்றாம் விருப்பையும் வழங்க முடியும்.

கேள்வி: திருவுளச் சீட்டு பற்றி தெளிவுபடுத் துங்கள்?

பதில் : திருவுளச் சீட்டு என்றால் போட்டியில் முன்னணியிலுள்ள இரண்டு வேட்பாளர்களும், இரண்டாம் கட்ட வாக்கெண்ணல் நடவடிக்கையின் பிறகும், அதிகூடுதலான வாக்குகளை பெறாமல் இருவரும் சம அளவிலான வாக்குகளை பெற்றால் அதாவது ஏற்கனவே அவர்கள் பெற்ற வாக்குகளும், பின்னர் தோல்வியடைந்த 33 வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட 2,3 ஆம் விருப்புகளும் ஒன்று சேர்க்கப்படும். தொடர்ந்து இரண்டு வேட்பாளர்களும் ஒரே சம அளவிலான வாக்குகளை பெற்றால் அந்த நேரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி இருவருக்கும் திருவுளச் சீட்டு போடப்படும். அதில் யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளதோ அவருக்கு இன்னு­­­­மோர் வாக்கினை வழங்கி தேர்தல் ஆணைக்குழு அவரை நாட்டின் ஜனாதி பதியாக தெரிவுசெய்யும்.

கேள்வி: தேர்தல் வன்முறைகளை கட்டுப் படுத்துவதற்கான வழிகள் என்ன?

பதில் : இது தொடர்­பாக தேர்தல் ஆணைக்­குழு ஒரு பிரி­வொன்றை அமைத்­துள்­ளது. அதன் மூலம் அவற்றை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

(நேர்காணல் : ஜெ.அனோஜன்)
நன்றி வீரகேசரி

Related Posts