யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள கடற்கரையோரக் கிராமமாக குருநகர் இருந்து வருகிறது. சுற்றுச் சூழலும், சுகாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகவுள்ள பகுதிகளையும், குருநகர் கடற்பகுதியை சூழவுள்ள அழகான பகுதிகளையும் புகைப்படங்களாக எடுத்துக் காட்சிப்படுத்தி உள்ளார் தர்மபாலன் ரிலக்சன்.


யாழ். குருநகர் மீன்சந்தையில் இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை குருநகரை மையப்படுத்தி ரிலக்சனால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் புகைப்படக் கலையில் ஆர்வமுள்ள அனைவரும் கண்காட்சியை பார்வையிட முடியும்.
தங்கள் சூழலையும் சுற்றுப்புறங்களையும் குப்பையாகவும், சுகாதார சீர்கேடாகவும் வைத்திருக்கும் மக்களுக்கு அதனை துப்பரவாக நாங்கள் ஒவ்வொருவரும் தான் வைத்திருக்க வேண்டும் என பொறுப்புணர்த்துவது முக்கியமானது. அப்படியான ஒரு தருணத்தை ஏற்படுத்திய ரிலக்சனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இவர் ஒரு சுயாதீன புகைப்படப் பிடிப்பாளராகவும், Jaffna Photography Society எனும் அமைப்பின் ஸ்தாபகராகவும் விளங்குகின்றார்.