யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்குங்கள்!தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்!!

கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் தமிழக மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் என யாழ். மாவட்ட எம். பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் வடக்கில் தீவுப் பகுதிகளில் மின்சார விநியோகம் இல்லாமை தொடர்பில் கேள்வியெழுப்புகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இலங்கை தமிழன் என்ற தமிழ் குரலாக பாராளுமன்றத்தில் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.

அதேவேளை, வட மாகாணத்தின் தீவுப் பகுதிகளில் பெருமளவு மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அங்கு வாரத்தில் 5 நாட்களுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.

இவ்வாறான நிலையில் கச்சத்தீவை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கோரியுள்ள நிலையில்,கச்சத்தீவை தர மாட்டோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும், தமிழகத்திற்கு வழங்கச் சொல்கின்றோம். தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்” என்றும் மேலும் தெரிவித்தார்.

Related Posts