Ad Widget

வைத்திய உதவியாளர் உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத துறைசார் பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிமுதல் 24 மணி நேரத்திற்கு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய உதவியாளர் சங்கத்துடன் தொடர்புடைய பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related Posts